ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

யாழ்ப்பாணத்தில் குறைவான வாக்களிப்பு, ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்

இந்தப் பொதுத்தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மிகக் குறைந்தளவான வாக்குப்பதிவே இடம்பெற்றிருக்கிறது.23 சதவீதத்துக்குச் சற்று அதிகமான வாக்குப்பதிவே இடம்பெற்றிருப்பது யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வுப் பிரசாரங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்தளவுக்கு மோசமான வாக்களிப்பு இடம்பெற்றிருப்பது பலரையும் அதிர்ச்சி கொள்ள வைத்திருக்கிறது.

அத்துடன் வாக்களிப்பு வீதம் குறைந்து போனதன் விளைவாக தேர்தல் முடிவுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை உணரடிகிறது.யாழ்ப்பாணம் கல்வி அறிவுடையோர் நிறைந்த ஒரு மாவட்டம்.
அதைவிட அரசியல் விழிப்புணர்ச்சியும் தமிழன் அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்தி படைத்தது என்றும் கருதப்படும் ஒரு மாவட்டம்.அதாவது ஒன்பது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யக் கூடிய வல்லமை பெற்ற ஒரே மாவட்டமாக இருப்பது யாழ்ப்பாணம் தான்.

இப்படிப்பட்ட யாழ்ப்பாணத்தில் நான்கில் ஒரு பங்கு வாக்காளர்கள் கூட வாக்களிக்கவில்லை. வாக்களித்தவர்களில் கிட்டத்தட்ட 12 சத வீதமானோன் வாக்குகள் நிராகக்கப்பட்டிருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

இந்தவகையில் ஐந்தில் நான்கு பங்கு வாக்காளர்கள் விரும்பியோவிரும்பாமலோ தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார்கள். இது தான் உண்மை.

யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 721,000 வாக்காளர்கள் இருந்தாலும், அங்கு தற்போது வசிப்பவர்கள் ஆறு இலட்சம் வரை தான் இருக்கும் என்பது பொதுவான மதிப்பீடு.

போரினால் இடம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் உள்ளன.

இந்தவகையில் யாழ்ப்பாணத்தின் தற்போதைய குடித்தொகையை விட அதிகமான வாக்காளர்கள் இருப்பது ஆச்சரியமானதொன்றல்ல.

இது வாக்களிப்பு சதவீதம் குறைந்து போனதற்கு ஒரு காரணம்.

ஆனால் அண்மையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த அளவுக்குக் கூட பொதுத்தேர்தலில் மக்கள் வாக்களிக்கவில்லை. ஆர்வம் காட்டவில்லை.

இது தான் ஏன் என்று புரியவில்லை.

குறைந்தபட்சம் ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்ட 25.66 வீதத்துக்கு வாக்களிப்பு இடம்பெற்றிருந்தாலும் கூட பரவாயில்லை.

ஆனால் அதைவிடவும் குறைவானவர்கள் வாக்களித்திருப்பதற்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டியவை.

இந்தத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களும் ஒரு வகையில் இதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்களே.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு,கிழக்கின் அனைத்துத் தமிழ் மக்களையும் தமிழ்க் கட்சிகளின் அரசியல் நடவடிக்கைகள் வெகுவாகப் பாதித்திருக்க வேண்டும்.

அரசியல்கட்சிகள் தமிழ்மக்களின் நலனுக்காக ஒன்றுபடுவதற்குப் பதிலாக ஒன்றுக்கொன்று முட்டிமோதிக் கொண்டது வாக்காளர்களை வெறுப்படையச் செய்திருக்க வாய்ப்புகள் உள்ளன.

குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட பிளவுகள், தமிழ்க் கட்சிகள் ஒன்றுபடாமல் பிந்து நின்று மோதிக் கொண்டது எல்லாமே வாக்காளர்களை வெகுவாகக் குழப்பி விட்டது. இன்னொரு வகையில் சுயேச்சைக்குழுக்கள் என்ற பெயரில் வாக்குகளை சிதறடிக்க களமிறக்கப்பட்டவர்களாலும் அவர்களுக்கு மேலும் வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது.

சுயேச்சைக் குழுக்கள் சில யாழ்ப்பாண சமுகத்தில் உழுத்துப்போன விடயங்களையே தூக்கிப் பிடித்து அரசியல் நடத்த முனைந்தன.

வாக்குகளைப் பிரிப்பதுதான் அவர்களின் நோக்கம். அதை அவர்கள் செம்மையாகவே செய்தும் முடித்திருக்கிறார்கள்.

அதிகளவில் சுயேச்சைகளும், அரசியல்கட்சிகளும் போட்டியிட்டு வாக்காளர்களைக் குழப்பிவிட்டனர். இதன் விளைவாக அவர்கள் மௌனமாக இருந்துவிட யோசித்திருக்கலாம்.

இன்னொரு பக்கத்தில் கடந்த காலங்களில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தின் மூலம் எதை சாதிக்க முடிந்தது என்ற கேள்வியும் வாக்காளர்கள் மத்தியில் இருப்பதை மறுக்க முடியாது.
அதாவது தாம் தெரிவு செய்யும் வேட்பாளர்களால் எதைச் செய்யடியும் என்ற கேள்வி அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது இயல்பு.ஒருவகையில் இது இலங்கையின் ஆட்சிறை மீதான வெறுப்பின் அடையாளமாகவும் பார்க்கத்தக்கது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் எந்தவொரு பொதுத்தேர்தலிலும் இந்தளவு குறைவான வாக்களிப்பு இடம்பெற்றதில்லை.1994இல் யாழ்ப்பாணத்தில் தீவகத்தில் மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டதால் குறைந்தளவு வாக்குப்பதிவு இடம்பெற்றது.

ஆனால் இந்தறை கிளிநொச்சி உள்ளிட்ட அனைத்துப் பகுதி மக்களுக்கும் வாக்களிக்கச் சந்தர்ப்பம் கிடைத்த போதும் மிகக் குறைந்தளவானோரே வாக்குமையைப் பயன்படுத்தினர்.
இதை ஒரு சாதாரண விடயமாக எடுத்துக் கொள்ள முடியாது.
புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்தில் அதிகளவு வேட்பாளர்கள் போட்டியிடுவது உச்சக்கட்ட ஜனநாயகத்தைப் பிரதிபலிப்பதாக அரசாங்கம் கூறியிருந்தது.
ஆனால் வாக்காளர்கள் அப்படிக் கருதியிருக்கவில்லை என்பது குறைந்தளவு வாக்களிப்பு வீதத்தின் மூலம் உறுதியாகியுள்ளது.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு, யாழ்ப்பாணத்தில் வாக்காளர்கள் குறைந்து போய்விட்டனர் என்றும் அங்கு சனத்தொகைக் கணக்கெடுப்புச் செய்து நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்க வேண்டும் என்று தென்னிலங்கையில் இருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

இந்தக் கோரிக்கையை இப்போது யாழ்ப்பாண மக்கள் வலுப்படுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் வாக்காளர்கள் குறைந்தளவிலேயே இருக்கின்றனர் என்று காரணத்தைக் காட்டி, வாக்காளர் பட்டியலை மீள்பசீலனை செய்து வெளிநாட்டுக்கு இடம்பெயர்ந்தோரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிடும் முயற்சிகள் முனைப்படையலாம்.
தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறையின்படி யாழ்ப்பாணம் முன்னர் 11 அங்கத்தவர்களைக் கொண்ட மாவட்டமாக இருந்தது.

விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல்றை நடைமுறைக்கு வந்த பின்னரும் 1989இல் 11உறுப்பினர்களே தெவாகினர்.ஆனால் 1994இல் அது 10 ஆக குறைக்கப்பட்டது. இப்போது 9 ஆசனங்களாகச் சுருங்கிப் போயுள்ளது.

வெளிநாடுகளுக்குச் சென்றவர்களைப் பட்டியலில் இருந்து நீக்கினால் யாழ்ப்பாணத்துக்கான ஆசன ஒதுக்கீட்டை 8 ஆகவோ அல்லது 7 ஆகவோ குறைத்துவிட முனையலாம். இது தமிழ்மக்கள் எதிர்நோக்கப் போகும் பேராபத்து.

இப்படியொரு நிலை வந்தால் அதற்கு யாழ்ப்பாண வாக்காளர்களே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.
இந்தத் தேர்தலில் தமிழ்மக்கள் சரியான தேர்வை மேற்கொள்ளத் தவறினாலோ அல்லது வாக்களிக்கத் தவறினாலோ அதன் விளைவுகளை அடுத்து வரும் ஆறு ஆண்டுகளுக்கு மட்டுமன்றி அதற்கு அப்பாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கப்பட்ட போதும் அது கருத்தில் கொள்ளப்படவில்லை.

இப்போது இதன் விளைவுகளை அறுவடை செய்வதை விடவேறு வழியிருக்கப் போவதில்லை.

ஹரிகரன்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல