ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

பிரஸ்ரேற்' சுரப்பு அதிகரிப்பால் ஏற்படும் தீமைகள்

நாம் ஜனித்த நாளிலிருந்து இறக்கும் வரை சில பருவங்களை எதிர்கொள்கின்றோம். அவையாவன குழந்தைப்பருவம், விடலைப்பருவம், நடுத்தரப் பருவம், வயோதிபப் பரும் என்பனவாகும். இப்பருவங்கள் அனைத்திலும் குழந்தை மற்றும் வயோதிபப் பருவங்களில் இயற்கையாக ஏற்படுகின்ற நோய் அல்லது குறைபாடு தொடர்பாகவும் அல்லலுற வேண்டியுள்ளது.

இவற்றிலிருந்து விடுபட்டு சுகதேகிகளாக வாழ்வதற்கு மருத்துவ நிபுணர்கள் பல்வேறு சுகாதார நடைமுறைகளைக் கையாளுகின்றனர். சிசுக்களுக்கு தடுப்பூசி போடுவதும் இதில் ஒன்றாகும்.

‘வயதான காலத்தில் இந்த மனுஷன் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யாமல் இருந்தால் போதும்’ என்று யாரைக் குறித்தாவது கூறியிருக்கின்aர்களா?

அதே குண நலத்துடன் தான் பிரஸ்ரேற் சுரப்பி சில ஆண்டுகளுக்கு மட்டுமே பரிணமித்து சாகும் வரை தொந்தரவு கொடுக்கின்றது என்பது வேதனைக்குரிய விடயம்.

ஐம்பது வயது வரையிலும் ஆண்களின் இன விருத்தி செயற்பாட்டிற்கு பிரதானமாக கருதப்படுகின்ற ஆண்விந்து மிதக்கச் செய்கின்ற திரவத்தை உற்பத்தி செய்வதுதான் இந்த பிரஸ்ரேற் சுரப்பியின் முக்கியமான பணியாகும்.

பிரஸ்ரேற் என்பது ஒரு மருத்துவ சொல்லாகும். இதுபற்றி ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் சிறுநீரக மருத்துவ நிபுணருமாகிய டாக்டர் சிaநாத் சந்திரசேகராவும், கொழும்பு வடக்கு மருத்துவமனை சிறுநீரக நிபுணரும் ஆலோசருமான டாக்டர் சுரேன் டி சில்வாவும் மக்களுக்கு பிரஸ்§ற் சுரப்பி பற்றியும் அதன் தாக்கம் எவ்வாறு அமைகின்றது என்பது பற்றி விரிவாக தெரியப்படுத்தியுமுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இக்குறைபாட்டால் அவதியுறுவோர் மட்டுநகர் போதனா மருத்துவமனையில் பணியாற்றும் வைத்திய நிபுணர்கள் டாக்டர் பீதாம்பரம் ஜீவராலை தொடர்புகொண்டால் உத்தம மாகும்.

ஐம்பது அறுபது வயதைக் கடந்த ஒருசில ஆண்களுக்கு பிரஸ்ரேற் சுரப்பி திடீரென வேலை நிறுத்தத்தில் குதிக்கின்றது.

இச்சுரப்பி மேற்கொள்கின்ற வேலை நிறுத்தத்தினால் உற்பத்தி அடியோடு குறைந்து விடுகின்றது.

அத்துடன் நின்றுவிடாது பொதுவாக தான் உண்டு, தன் ஓய்வுண்டு என்று சும்மா இருக்காமல் ஏகத்துக்கு பெருத்துக் கொண்டே செல்கின்றது.

இதனை வேறுவிதமாகக் கூறுவதாயின் தொடர்ந்து வீங்கிக் கொண்டே போவது தான் பிரச்சினையே! பிரஸ்ரேற் சுரப்பி குறைபாட்டால் அவதியுறும் ஆண்களுக்கு சாகிறவரையில் உபத்திரவம் கொடுத்துக்கொண்டே இருப்பது தான் துரதிஷ்டமாகும்.

சில ஆண் முதியவர்களுக்கு தீராத பிரச்சினையை தந்துகொண்டிருக்கின்ற பிரஸ்ரேற் சுரப்பி உடலில் எந்தப் பகுதியில் அமைந்துள்ளது என்பதைப் பார்ப்போம்.

சிறுநீர்ப்பைக்கு கீழே இரண்டு பக்கங்களிலும் பேரிக்காய் வடிவத்தில் உள்ளது. இதன் மையப்பகுதியில் தான் சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை வெளியேற்றுகின்ற குழாய் செல்கின்றது. சிலருக்கு ஐம்பது ஆண்டுகள் வரை அதுபாட்டுக்கு தனது தொழிலை மேவியபடியே இருக்கின்றது. பிறகுதான் வீங்கத் தொடங்குகின்றது. இதற்கு காரணம் பரம்பரை என்றும் கூறலாம்.

ஐம்பது சதவீத ஆண்களுக்கு ஐம்பது வயதுக்கு பிறகும், தொண்ணூறு சதவீத மானவர்களுக்கு எண்பது வயதுக்குள்ளும் இது பெரிதாகின்றது. ஆனால் ஒருசிலருக்கு மட்டும் தான் இரு பிரச்சினையாகின்றது.

இந்தப் பிரச்சினை ஏன் உருவாகின்றது?

முதியவர்களுக்கு தலைநரைப்பது போன்று, தோல்சுருங்குவது போன்று ஞாபக மறதிபோல இதுவும் ‘ஹோர்மோன்’ மாற்றங்களால் நிகழ்கின்ற இயற்கையான விஷயம்.

இருபது வயதில் எலுமிச்சை அளவில் இருக்கும் இது வயது ஆக ஆகப் பருத்த மாங்காய் அளவிற்குப் பெரிதாகிவிடுகின்றது. ஒரு கட்டத்தில் இரண்டு பக்க பிரஸ்ரேற் சுரப்பிகளும் வீங்குவதினால் நடுவே பயணிக்கும் சிறுநீர் வெளியேற்றும் குழாயை அழுத்துகின்றன.

கிடைக்கிற சிறு இடைவெளியூடாக சிறுநீர் சிறிது சிறிதாக வெளியேறும். இந்த பிரஸ்ரேற் சுரப்பிகள் வீங்கியிருப்பதற்கான அறிகுறிகளைப் பார்ப்போம். சிறுநீர் அடிக்கடி போவது. அதுவும் குறிப்பாக இரவு வேளைகளில் நித்திரையானதும் பத்து பதினைந்து தரமும் சிறுநீர் கழிக்க வேண்டிய உபத்திரவம் ஏற்படுகின்றது. ஆகவே நித்திரைக்கு அதோ கதிதான். இதனைச் சமன்படுத்த பகலிலும் துயிலவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாக்கின்றது.

சிறுநீர்ப்பையில் கல் உருவாகுதல், சிறுநீர் வெளியேறும் குழாய் அடைத்துக்கொள்ளுதல், தற்காலிக அல்லது நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு - இவையெல்லாவற்றிற்கும் முன்னோடியாக இந்த வீக்கம் அமைய உண்மையில் நிரந்தர வாய்ப்புண்டு எனலாம். இப்படிப்பட்டவர்களுக்கு சிறுநீர்ப் பையின் அடியில் துவாரம் உண்டாக்கித்தான் சிறுநீரை வெளியேற்ற முடியும்.

இந்த நீரடைப்புக்கு பிரதான காரணம் சுய மருத்துவம் என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக மருத்துவரின் அறிவுரையின்றி கண் மற்றும் மூக்கில் விடப்படும் சொட்டு மருந்துகளினால் நீரடைப்பு நிகழ அதிக பட்ச வாய்ப்பு உண்டு என்கிறது ஓர் ஆய்வு.

சிறுநீரக மருத்துவரின் பரிந்துரைக்கு அமைவாக மிகவும் விலையுயர்ந்த மாத்திரைகளை ஒழுங்காக உட்கொண்டால் வீக்கம் பெரிதாகாமல் குணப்படுத்தும் அளவிற்கு சுலபமான மருத்துவ முறைகள் வந்துவிட்டன.

மற்றயது ஆசன வாய்வழியே கருவியை விட்டு வீக்கத்தை தேங்காய் சுரண்டுவதைப் போன்று சுரண்டியும் எடுக்கலாம். இன்னொன்று சத்திர சிகிச்சை மூலம் வயிற்றைத் திறந்து ‘ஆப்பரேஷன்’ மேற்கொள்வதன் வாயிலாகவும் இதை முற்றிலுமாக நிரந்தரமாக குணப்படுத்தலாம்.

சென்ற வருடம் ஒக்டோபர் மாதத்தில் இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங் (வயது எழுபத்தைந்து) பிரஸ்ரேற் சுரப்பியில் ஏற்பட்ட வீக்கத்திற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

புது டெல்லியில் உள்ள அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (ஏ.ஐ.ஐ.எம்.எஸ்) மருத்துவமனையில் வெற்றிகரமாக பிரஸ்ரேற் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பேராசிரியர் என். பி. குப்தா தலைமையிலான மருத்துவர் குழு இதனை சிரமமின்றி நிறைவேற்றியது.

இரண்டு நாட்கள் வீட்டில் ஓய்வு எடுத்த பின்னர் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் (யூ.என்.ஒ) பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்.

சமீப காலமாக எண்பது சதவீத பிரஸ்ரேற் சுரப்பி நோயாளிகளுக்கு மருந்து மட்டுமே கொடுத்து குணப்படுத்துகின்றனர். ஆனால் என்ன நிலையில், என்ன மாதிரியான சிகிச்சை தேவை என்பதைச் சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர்தான் முடிவு செய்ய வேண்டும். ஏனெனில் இந்த பிரஸ்ரேற் சுரப்பி வீக்கத்திற்கு சத்திரசிகிச்சை செய்வது அவசியமா? அநாவசி யமா? என்கின்ற தீர்மானத்தை எடுப்பது மருத்துவ உலகில் பல்வேறு விமர்சனங்களுக் குட்பட்டு வருகிறது.

ஆகவே நாற்பத்தைந்து வயதைடையும் ஆண்கள் சிறுநீரக மருத்துவ நிபுணரை தவறாமல் அணுகி அவரது பரிந்துரைக்கு அமைவாக ‘ஸ்கானிங்’ செய்துகொண்டு பிரஸ்ரேற் சுரப்பியின் பருமனை சரிபார்த்துக் கொள்ளலாம் ஏனெனில் பிரஸ்ரேற் சுரப்பி வீக்கத்தினால் ஏற்படவிருக்கும். ‘கான்ஸர்’ உண்டாவதை தவிர்த்துக்கொள்ளலாம்.

ஐம்பது வயதைக்கடந்த ஆண்கள் சிலருக்கு பிரஸ்ரேற் சுரப்பியின் பரிமாணம் அதிகரித்து சாகும்வரை உபத்திரம் நல்கின்ற கொடுமையை மருத்துவ ரீதியாக குணப்படுத்துவது அவசியமாகும்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல