திங்கள், 19 ஜூலை, 2010

மனிதர் உருவாக்கிய முதல் சாய்ந்த கோபுரம்

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள கபிடல் கேட் என்ற 160 மீட்டர் உயரமுடைய கட்டடம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் முதன்மையான சாய்ந்த நிலைக் கோபுரம் என்ற சாதனைக்காக, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் தான் உலகிலேயே மிகவும் சாய்வாக உள்ள கோபுரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள அபுதாபியில், அபுதாபி நஷனல் எக்ஸிபிஷன் நிறுவனம் சார்பில் சாய்ந்த நிலையிலான கட்டத்தைக் கட்டும் பணி தொடங்கப் பட்டது. இதற்கு கபிடல் கேட் என பெயரிடப்பட்டது.

160 மீட்டர் உயரமுடைய இந்தக் கட்டடம், 35 மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டடம் 18 பாகை அளவுக்கு சாய்ந்த நிலையில் கட்டப்பட்டுள்ளது.

இது பைசா கோபுரத்தின் சாய்வை விட நான்கு மடங்கு அதிகம் (பைசா கோபுரத்தின் சாய்வு 3.99 பாகை) இந்தக் கட்டடத்தின் 12 மாடிகள், செங்குததாக உள்ளன. அதற்கு அடுத்த நிலையில் உள்ள மாடிகள் படிப்படியாக சிறிய அளவில், சாய்ந்த வகையில் கட்டப்பட்டுள்ளன. கடந்த ஜனவரியில் இந்தக் கட்டடத்தின் வெளிப்புறத் தோற்றம் கட்டி முடிக்கப்பட்ட போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

இதை கட்டுவதற்கு 10 ஆயிரம் தொன் இரும்புப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஐந்து நட்சத்திர ஓட்டல் மற்றும் அலுவலகங்கள் இதில் இயங்கவுள்ளன.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல