வெள்ளி, 23 ஜூலை, 2010

இனி மாடுகளை மனிதன் குளிப்பாட்ட வேண்டியதில்லை !!!

நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதர்களின் வேலைகள் இயந்திரமயமாக்கப்பட்டு வருகிறது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாடுகளை தேய்த்து குளிப்பாட்டும் தூரிகை கொண்ட இயந்திரத்தால் மாடுகள் குளிப்பாட்டும் வேலை எளிமையாக்கப்பட்டு அந்த வேலையை செய்து வந்தவர்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.

அது மட்டுமல்லாமல் இந்த தூரிகை கொண்டு தேய்க்கப்படும் போது பசுக்கள் அதை நன்றாக அனுபவிப்பதுடன் பால் உற்பத்தியும் அதிகமாகிறது என்கிறார் இந்த இயந்திரத்தை வடிமைத்த டி லாவல். பால் உற்பத்தியாளர்கள் மத்தியிலும் இந்த இயந்திரத்திற்கு ஏகப்பட்ட கிராக்கியாம். இந்த தூரிகைகளை கொண்டு தேய்க்கும் போது பசுக்களின் ரத்த ஓட்டம் சீராவதால் பால் உற்பத்தி அதிகமாவதாக கூறுகின்றனர் இதை தயாரித்த ஸ்வீடன் நிறுவனத்தினர்.

30,000 இயந்திரங்களை ஸ்வீடனில் விற்ற பின்னர் தற்போது பிரித்தானியாவிலும் இந்த தூரிகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாடுகளின் அனைத்து பகுதிகளிலும் தானாகவே சுழன்று தேய்க்கும் வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் சுகாதாரக் கேடும் தடுக்கப்படுவதோடு மாடுகள் நல்ல ஆரோக்கியத்துடன் உறுதியாக 3 . 5 சதவீத பால் உற்பத்தி அதிமாகிறது என்கின்றனர் இயந்திர வடிவமைப்பாளர்கள்.


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல