திங்கள், 9 ஆகஸ்ட், 2010

உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள்

குழந்தையை நன்கு போர்த்தி மார்போடு அணைத்துக் கொள்ளுங்கள். பெரும்பாலான பச்சிளங் குழந்தைகள் தாயின் கருவறையில் இருந்ததைப் போலவே பாதுகாப்பாக இருக்க விரும்புகின்றன.

ஆகவே குழந்தையை போர்வையால் போர்த்தினாலோ அல்லது தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டாலோ பாதுகாப்பாக உணர்கிறதா என்று பாருங்கள். பின்னணிச் சத்தங்கள் கருவறையில் இருக்கும் போது தாயின் இதயத்துடிப்பு குழந்தைக்கு கேட்கும். மென்மையான இசையை ஒலிக்கச் செய்வது அல்லது தாலாட்டுபாடுவது பின்னணியில் வொஷிங்மெஷின் சத்தம் வந்தாலும் பரவாயில்லை இவை குழந்தையை அமைதிப்படுத்தி தூங்கச் செய்யும்.

மென்மையாக ஆட்டுவது நீங்கள் நடக்கும் போதோ அல்லது அமர்ந்திருக்கும் போதோ மென்மையாக குழந்தையை ஆட்டுங்கள் அது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்கான தொட்டில் சில குழந் தைகளை அமைதிபடுத்தும். காரில் செல்லும் போது சில குழந்தைகள் கார் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே உடனே தூங்கி விடும்.

மசாஜ் செய்து விடுங்கள் மசாஜ் குழந்தைகளை அமைதிபடுத்தும்.
வயிற்று வலி இருக்கும்போது வயிற்றை தடவிவிடுவது நல்லது. குழந்தையின் வலியை கஷ்டத்தைப் போக்க நீங்கள் ஏதோ முயற்சி செய்கிறீர்கள் என்ற ஆறுதலை அது உங்களுக்குத் தரும்.

குழந்தை விரல் சூப்புவது தவறில்லை சில பச்சிளங் குழந்தைகள் விரல் சூப்புவார்கள். இது அவர்களுக்கு சொகுசான ஓர் உணர்வைத் தரும். ஆனால் விரல் சுத்தமாக இருக்க வேண்டும். ''சொகுசாக சூப்புவது'' என்பது குழந்தையின் இதயத் துடிப்பை சீராக்கும், வயிற்றுக்கும் நல்லது, குழந்தையும் அமைதியாக இருக்கும்.

உங்களை அதிகமாக வருத்திக் கொள்ள வேண்டாம். தொடர்ந்து அழும் குழந்தைக்கு நீண்ட கால பாதிப்பு எதுவும் ஏற்பட்டு விடாது. ஆனால் பெற்றோர்களுக்கு மன உளைச்சல் அதிகமாகலாம். குழந்தையை அமைதிப்படுத்த உங்களால் முடிந்த எல்லா வற்றையும் செய்து விட்டீர்களேயானால் அதற்கு மேல் நீங்கள் செய்யக் கூடியது இதுதான்:

* நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்

* உங்களுக்கு கேட்காதவாறு குழந்தை அழும்படி சிறிது நேரத்திற்கு எங்காவது பாதுகாப்பான இடத்தில் குழந்தையை விடுங்கள்.

* நண்பரையோ அல்லது உறவினரையோ அழைத்து சிறிது நேரத்திற்கு குழந்தையை அவரிடம் தாருங்கள்.

* அக்கம்பக்கத்தில் உங்களைப் போன்று புதிதாய் குழந்தை பெற்றவர்கள் யாராவது இருக்கிறார்களா என்பது பற்றி உங்கள் குடும்ப டாக்டரிடம் கேட்டு தெரிந்து கொண்டு அவர்களிடம் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

* உங்கள் குழந்தை தனது தேவையை உங்களுக்கு தெரிவிக்க ஒவ்வொரு நாளும் புதிய வழிகளை கற்கிறது என்பதையும், இந்த அழுகைக் கட்டம் ஒரு நாள் நிற்கும் என்பதையும் நீங்கள் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல