வியாழன், 19 ஆகஸ்ட், 2010

ஈரலின் (Liver) பணி என்ன?

உடலில் அதிகமாகப் பணிபுரியும் உறுப்புகளுள் ஈரலும் ஒன்று. வயிறு, குடல்கள், இதயம் அல்லது தசைகள் போன்று இது நெளிவதோ புரள்வதோ இல்லை. இதன் செயல்பாடுகள் வெளிப்படையாகத் தெரிவதில்லை; ஈரல் உடலின் மிகப் பெரிய உள் உறுப்பாக விளங்குகிறது; இதன் எடை 2-3 பவுண்டுகளாகும். அடி வயிற்றின் மேல் வலப் பகுதியில் நிறைந்திருப்பது இது. உடல் வேதியியலில் பல்வேறு வகையான, முக்கியமான, குறைந்தது 500 பணிகளை இவ்வுறுப்பு கொண்டுள்ளது.

ஈரலில் தனிச் சிறப்பு வாய்ந்த இரத்த நாளம் உள்ளது; இதனைக் கல்லீரல் சிரை (hepatic portal vein) என்பர். இது இதயத்திலிருந்து நேரடியாக வரவில்லை எனினும், இரத்தத்தை வயிறு, குடல்கள் மற்றும் மண்ணீரல் (spleen) ஆகியவற்றிற்கு எடுத்துச் செல்கிறது. இந்த இரத்தத்தில் ஊட்டப் பொருட்கள் அதிகமாக உள்ளதால் உடலாற்றலுக்கு பெரிதும் காரணமாக அமைகிறது; இரத்தத்தால் கொண்டுவரப்படும் பல ஊட்டப்பொருட்களை ஈரல்தான் செயல்படுத்துகிறது. இது பலவற்றைக் குறிப்பாக சர்க்கரை, இரும்புச் சத்து, பி12 வைட்டமின் போன்ற கனிமங்கள் ஆகியவற்றைச் சேமித்து வைக்கிறது. மேலும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களையும் இது நீக்குகிறது.

ஈரலின் உறுப்புத் தடிப்புக் கோளாறு (cirrhosis) என்பது நீக்க முடியாத நோயாகும்; இந்நோய்க்கு முக்கிய காரணமாக விளங்குவது மிகுதியாக மது அருந்துவதேயாகும்.

பித்தநீர் (Bile) என்பது என்ன?

ஈரலின் அடிப்பகுதியில், வலப்புறத்தில் அமைந்திருப்பது பித்தநீர்ப்பை (gall bladder) ஆகும். மஞ்சள் நிறமுள்ள பித்தநீர் சேமித்து வைக்கப்படும் சிறிய அளவிலான பை இது. பித்தநீர் எனப்படுவது கொலஸ்ட்ரால், பித்த உப்புகள் மற்றும் நிறமிகள் (pigments) ஆகியவை கலந்த ஒரு திரவம். இதில் ஒரு பகுதி ஈரலிலும் மற்றுமொரு பகுதி பித்தநீர்ப் பையிலும் நாம் உணவு உண்ணும் வரை தங்கியிருக்கும். பின்னர் பித்தநீர் ஈரலிலிருந்தும் பித்தநீர்ப் பையிலிருந்தும் பித்தநீர் நாளம் எனப்படும் முக்கிய குழாய்க்குச் சென்று அங்கிருந்து சிறுகுடலுள் போய்ச் சேரும். பித்தநீர் என்பது ஈரலில் இருந்து வெளிப்படும் ஒரு கழிவுப் பொருளாகும். ஆனால் இது உணவு செரிமானத்திற்கு உதவி புரிகிறது. இதிலுள்ள கனிம உப்புகள் சிதைவுற்று குடலுள் இருக்கும் பொருட்களைச் சின்னஞ்சிறு துணுக்குகளாக்கிக் குழம்பு நிலைக்கு மாற்றுகின்றன.

சில சமயங்களில் பித்தநீர்ப்பையில் கடினமான பொருட்கள் சேர்ந்து கொட்டை போல் மாறிவிடுவதுண்டு. இவை பித்தநீர்ப் பையிலுள்ள கற்கள் (gall stones) என அழைக்கப்படுகின்றன. முக்கியமாக கொலஸ்ட்ரால், கால்சியம் போன்ற பொருட்களால் இக்கற்கள் உருவாகின்றன.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல