திங்கள், 31 ஜனவரி, 2011

லங்கா ஈ நியூஸ் தலைமையகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது: முற்றாகச் சேதம்

மாலபேயில் இருந்து இயங்கிவரும் எமது லங்கா ஈ-நியூஸ் இணையத்தள அலுவலகம் இன்று அதிகாலை 2 மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.


இந்த தீவிபத்தில் ஈ-நியூஸ் இணையத்தள காரியாலயத்தின் பிரதான செயற்பாட்டு கட்டமைப்பு மீள பயன்பாட்டுக்கு எடுக்க முடியாத வகையில் முழுமையாக சேதமடைந்தது

அதேவேளை, அங்கிருந்த நூலகத்தில் 20 வருடங்கள் பழைமையான 3000 ற்கும் அதிகமான புத்தகங்களும் தீக்கிரையாகியுள்ளன.

பெற்றோல் போன்ற எரிபொருளை பயன்படுத்தியே தீவைக்கப்பட்டுள்ளது.

சேதத்தை ஏற்படுத்தியவர்கள் இணையத்தள காரியாலய கட்டிடத்தின் முன்பக்க கதவை உடைத்துக்கொண்டு உள்நுழைந்து இந்த வன்செயலை மேற்கொண்டுள்ளனர்.

தீ பரவிய பின்னர் குண்டு வெடிப்பதைப் போன்று கணணி திரைகள் வெடித்த சத்தத்தைக் கேட்ட அயலவர்கள் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்துள்ளனர்.

எனினும் நிலைமை கட்டுப்பாட்டை மீறியதால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இத்தீயை கட்டுப்பட்டுக்கு கொண்டு வந்த போதும் காரியாலயத்தில் இருந்த கணிணி அனைத்தும் பாரியளவில் சேதமடைந்துள்ளன.

இலக்கம் 844, தஹம் மாவத்தை, மாலபே உள்ள காரியாலயத்தின் கதவுகள் தீப்பற்றிக் கொள்வதற்கு முன்பு உடைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், பொலிஸார் மோப்ப நாய் சோதனைகளையும் நடத்தியுள்ளனர்.

இதேவேளை, விசாரணைகள் துரிதமாக நடத்தப்பட்டு வருவதாக தளங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல