வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

ஆணி ஏற்றப்பட்ட மற்றுமொரு பணிப்பெண் கராப்பிட்டிய வைத்தியசாலையில்

சவூதி அரேபியாவில் பணியாற்றிய மற்றுமொரு பணிப்பெண் கைகளில் ஆணி ஏற்றிய நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது இடது கையிலிருந்து நேற்றையதினம் ஒரு ஆணி அகற்றப்பட்டுள்ளதாகவும் இன்னும் இரு ஆணிகள் அகற்ற வேண்டியுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.

காலியை வசிப்பிடமாகக் கொண்ட இப்பணிப்பெண் கடந்த 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக கடமையாற்றியுள்ளார். அவரது வீட்டு எஜமானாரால் துன்புறுத்தல்களுக்குள்ளான நிலையிலேயே அவர்  நாடு திரும்பியுள்ளார்.

தனது வீட்டு எஜமானார் தன்னுடன் தவறாக நடக்க முற்பட்டபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், அவர் தனது கைகளில் ஆணி ஏற்றியதாக அப்பணிப்பெண் கூறினார்.

இது தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல