செவ்வாய், 27 மார்ச், 2012

மாவோயிஸ்ட் குழுவுடன் இணைந்து இலங்கையர் குழுவொன்று செயற்படுவதாக கர்நாடகா அரசு தெரிவிப்பு

ஆந்திராவின் மேற்கு பகுதி காடுகளில் செயற்பட்டு வரும் மாவோயிஸ் குழுக்களுடன் இணைந்து சிறிய இலங்கை குழுவொன்றும் செயற்பட்டு வருவதாக கர்நாடகா உள்துறை அமைச்சர் ஆர்.அசோக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஆந்திர பிரதேசத்தின் சிக்கமகூலர், உடுப்பி, ஷிமோகா மற்றும் தக்ஷின கன்னடம் ஆகிய பகுதிகளில் 25-30 மாவோயிஸ்டுக்களுடன் இணைந்து இலங்கை குழுவொன்றை செயற்பட்டு வருவதை தாம் அறிந்துள்ளதாக கர்நாடகா சட்ட சபையில் ஆர்.அசோக் கூறியுள்ளார்.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அண்மையில் நக்சலைட்டுக்கள் கைப்பற்றிய மாவோயிஸ்டுக்களின் ஆயுதங்களை அடுத்து இலங்கை சந்தேகநபர்கள் குறித்த தகவல் வெளிச்சத்திற்கு வந்ததாக கர்நாடகா சட்டசபையில் காங்கிரஸ் எம்பி அஷ்வத் நாரயணன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அசோக் தெரிவித்துள்ளார்.

இந்த அச்சுறுத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கர்நாடகா உள்துறை அமைச்சர் அசோக் கூறியுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல