வியாழன், 22 மார்ச், 2012

இலங்கை அகதிகள் இந்தியாவில் இருந்து ஆஸி.க்கு கடத்தப்பட்டு அங்கும் அகதிகளாய் நடுத்தெருவில்!

இலங்கை தமிழ் மக்களை, அவுஸ்திரேலியாவில் வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி அழைத்துச் சென்று அங்கு அகதிகளாக குடியேற்றும் கொடுமை நடப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த கொடுமையில் ஈடுபடும் முகவர்களை பொலிஸார் வேட்டையாடி பிடித்து வருகிறார்கள்.


கேரள மாநிலம் கொச்சியில் இருந்து, வேகமாக செல்லும் மீன்பிடி எந்திர படகு மூலம் கள்ளத்தனமாக இலங்கை தமிழ்மக்களை அழைத்து செல்வதாகவும், கடந்த மாதம் மட்டும் 27 பேர் இதுபோல் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும் தெரியவந்தது.

இந்த மாதம் இதுபோல் 20 பேரை அழைத்துச் செல்ல முகவர்கள் திட்டமிட்டு இருப்பதும் கண்டறியப்பட்டது.

இவ்வாறு அழைத்து செல்லப்படுபவர்களிடம் தலா இந்திய ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வசூலிப்பதாகவும் புகார் கூறப்பட்டது. இந்த செயலில் ஈடுபடும் 20 முகவர்களையும் வேட்டையாடி பிடிக்க தமிழக கியூ பிரிவு பொலிஸார் இரகசிய வேட்டையில் ஈடுபட்டனர். இந்த வேட்டைக்கு கியூ பிரிவு சூப்பிரண்டு சம்பத்குமார் தலைமை வகித்தார்.

தஞ்சை கியூ பிரிவு துணை சூப்பிரண்டு ராஜேந்திரன், சேலம் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் நடந்த வேட்டையில் கடந்த சனிக்கிழமையன்று நாகப்பட்டினத்தில் ராஜன் என்ற இத்தாலி ராஜன்(வயது 42) என்ற முகவர் கைது செய்யப்பட்டார். நேற்று சேலத்தில் ரமேஷ் என்ற முகவரும் கைதானார்.

ரமேஷ் சொன்ன தகவல் அடிப்படையில் மாமல்லபுரம் அருகில் உள்ள ஒரு குடோனில் 2 ஆயிரம் லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த டீசல், அவுஸ்திரேலியா செல்லும், படகுக்கு பயன்படுத்த பதுக்கி வைத்திருந்ததாகவும் தெரிய வந்தது.

கைதாகியுள்ள இத்தாலி ராஜன் இலங்கை தமிழர் ஆவார். இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இத்தாலி நாட்டில் இவர் வாழ்ந்து வந்ததால், இவரை இத்தாலி ராஜன் என்று அழைக்கிறார்கள்.

இவரோடு இணைந்து செயல்பட்ட மேலும் 18 முகவர்கள் கியூ பிரிவு பொலிஸார், நாகை, தஞ்சை, திருவாரூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் வேட்டையாடி பிடித்து வருகிறார்கள். இத்தாலி ராஜனிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள செயற்கைகோள் மூலம் செயல்படும் சக்திவாய்ந்த கைதொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் கியூ பிரிவு பொலிஸார் கூறினார்கள்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல