வெள்ளி, 9 மார்ச், 2012

யாழில் முதல் முறையாக முச்சக்கரவண்டி ஓட்டும் பெண்கள்

யாழ்ப்பாணத்தில் முதல்த் தடைவையாக 10 பெண்கள் முச்சக்கர வண்டி சேவையில் ஈடுபடவுள்ளனர்.
பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட இந்தப் பெண்களுக்கும் மகளீர் தினமான நேற்றையதினம் (08.03.2012) பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தால் மானிய அடிப்படையில் முச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு பெண்கள் யாழ் மாவட்ட மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் உதயனி நவரத்தினம் தலைமையில் நடைபெற்றது.



தொடர்ந்து தலைமை உரை வழங்கிய யாழ்மாவட்ட மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் உதயனி நவரட்னம் நாடடில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக கணவன்மாரை இழந்த பெண்கள் பெற்றோரை இழந்த
பெண்கள், வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட பெண்கள் என கிராம சேவை உத்தியோகத்தர்களின் உதவியுடன் இந்தப் 10 பெண்களும் தெரிவுசெய்யப்பட்டதாகக் கூறினார்.

இவர்களில் 04பேர் நல்லூர் பிரதேச செயலகப்பிரிவிலிருந்தும், 02பேர் யாழ்ப்பாண செயலகப்பிரிவிலிருந்தும், 03பேர் உடுவில் பிரதேச செயலகப் பிரிவிலிருந்தும் ,ஒருவர் கோப்பாய் பிரதேச செயலக பிரிவிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என்றும், இவர்களுக்கான சாரதிப் பயிற்சிகள் வழங்கப்பட்டு சாரதி அனுமதிப் பத்திரமும் பெறுக்கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெண்களும் சாதிக்கமுடியும் என்ற ஊக்கத்ததையும், நம்பிக்கையையும் வழங்கும் முகமாகவே தமது நிறுவனம் செயற்பட்டு வருவதாக இங்கு உரையாற்றிய பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி செல்வி திருச்சந்திரன் தெரிவித்தார்.

400,000 ரூபா பெறுமதியான இந்த முச்சக்கரவண்டி ஒன்றுக்கு வாரந்தம் 3,000 ரூபா வீதம் 24 மாதங்கள் 288,000 ரூபா வங்கிக் கடன் பணம் செலுத்தினால் மட்டும் போதும் என்றும் மீதி 112,000 ரூபா பணத்தை தமது பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முச்சக்கர வண்டியைப் பெற்றுக்கொண்ட பயனாளி துரைசிங்கம் றேணுகா கருத்துத் தெரிவிக்கையில், “பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் எனக்கு கிடைத்த இந்த உதவி மூலம் தனது குடும்பத்தை
நல்ல நிலைக்கு இட்டுச் செல்ல முடியும்” என்றார்.அத்துடன், தன்னைப் போன்று பொருளாதார ரீதியாகக் கஸ்டப்படும் பெண்கள் உள்ளார் என்று குறிப்பிட்ட இந்தப் பயனாளி, கல்வி ஆய்வு நிறுவனத்தின் இத்தகையை சேவை அவர்களுக்கு கிடைக்கவேண்டும் என்றும் கூறினார்.

இந்தநிகழ்வில் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் செல்வி.திருச்சந்திரன் உடுவில் மகளீர் கல்லூரி அதிபர் திருமதி ஷிராணிமில்ஸ் யாழ்மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் உதயனி நவரத்தினம், திட்ட உத்தியோகத்தர் மாலதி, சுதாயஜினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல