திங்கள், 2 ஏப்ரல், 2012

இலங்கையைக் காப்பாற்ற படம் தயாரிக்கிறது இந்தியா

இறுதிக்கட்டப் போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்களை மறைக்க இந்தியா திரைப்படம் ஒன்றை விரைவில் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் நடந்தேறிய விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை இராணுவத்துக்கும் இடையேயான இறுதிக்கட்ட சமரில், பெருந்தொகையான தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களை இங்கிலாந்து ஊடகமான சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது.



இத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காட்சிகளை பொய்யாக்கும் வகையில், இலங்கைக்கு ஆதரவாக புதிய காணொளி ஒன்றை தயாரித்து வருகிறது இந்திய வெளிவிவகார அமைச்சு எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையுடனான நட்புறவை பலப்படுத்தும் வகையில் இக்காணொளி அமையவுள்ளது.இந்தியாவிலுள்ள மிகப்பிரபலமான இயக்குனர்களை அழைத்த இந்திய வெளிவிவகார அமைச்சு அவர்கள் மூலம் இக்குறும்படத்தை இயக்கவுள்ளது.

யாழ்ப்பாணம் என பெயர் சூட்டப்பட்ட இக் குறும்படத்தை இயக்குனர் ஜித் செர்கர் இயக்க பொலிவூட்டின் மிக பிரபலமான நடிகர் ஜோன் ஆப்ரஹாம் நடித்துள்ளார்.

இதற்காக அங்கு நிலவும் சூழ்நிலைகளை தெரிந்து கொள்வதற்காக அடிக்கடி இலங்கையின் தமிழ் பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் நடிகர் ஜோன் ஆப்ரஹாம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல