தமிழகத்தில் சில செய்திகள் முக்கியத்துவம் தரப்படாமலேயே விட்டுவிடப்படுகின்றன. இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து தமிழகத் தில் தொடர் விவாதம் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் தங்கவைக்கப் பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகளின் பிரச் சனைகள் போதுமானஅளவுக்கு விவாதிக்கப்படுவதில்லை. அண்மையில் தமிழகத்தில் பல்வேறு முகாம்களிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 87 ஆண்கள் 17 பெண்கள் 19 குழந்தைகளை கேரள போலீசார் பிடித்தனர். மிகவும் ஆபத்தான முறையில் மீன்பிடி படகில் இவர்கள் ஆஸ்திரேலியா செல்ல முயன்றுள்ளனர். இவர்கள் தமிழகத்தில் உள்ள 17 அகதி முகாம்களிலிருந்து சென்றுள்ளனர். ஆஸ்திரேலியா அழைத்துச் செல்வதாகக் கூறி இவர்களிடமிருந்து தலா 1 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை சிலரால் வசூலிக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் பாதுகாப்பில்லாத நீண்டவழி கடல்பயணம் மேற்கொள்வது நெருப்புடன் விளையாடுவது போன்றது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். எனினும் எங்களது குடும்பத்தை நல்ல முறையில் வாழவைப்பதற்காக குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைப்ப தற்காக இந்த விபரீத முயற்சியில் இறங்கினோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இத்தகையதொரு முடிவை அவர்கள் எடுக்க காரணம் என்ன? தமிழகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது குறித்து விவாதிப்பது அவசியமாகும்.
தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்க வைக் கப்பட்டுள்ளனர். 1983ம் ஆண்டு துவங்கி இனி இலங்கையில் தங்கள் சொந்த வாழ்விடங்களில் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பதற்காக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு தமிழகம் வந்தவர்கள் இவர்கள். வரும் வழியில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வர்களின் கண்ணீர்க்கதைகள் ஆயிரம் ஆயிரம்.
இங்கு பிழைக்க வந்த பிறகாவது அவர்கள் கண்ணியத்தோடு வாழ வைக்கப்படுகிறார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. முகாம்களில் போதுமான அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பதே உண்மை நிலையாக உள்ளது. அவர்களுக்கு அரசுத் தரப்பில் வழங்கப்படும் உதவிகளும் போதுமானதாக இல்லை. மறுபுறத்தில் அவர்கள் எப்போதும் சந்தேக வளையத்திற்குள்ளேயே வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது குழந்தைகளின் உயர் கல்விக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படுவ தில்லை என்ற மனக்குறையும் அவர்களுக்கு உள்ளது.
வெளியிடத்தில் சென்று வேலைதேடி பிழைப்பது பெரும்பாடாக உள்ளது. அப்படி வேலை செய்யும் இடங்களிலும் அவர்கள் கடுமையான சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிவடைந்தபோதும் தங்களது தாயகத்திற்கு திரும்பிச் செல்லும் நம்பகமான சூழ்நிலையை ராஜபக்சே அரசு ஏற்படுத்தவில்லை. அங்குள்ள தமிழர்களின் இன்னலே இன்னமும் பெரும் துயரமாக உள்ளது. இந்நிலையில் இங்குள்ள இலங்கை தமிழ் அகதிகளின் பிரச்சனைகளை விரிவாக ஆய்வு செய்து அவர்களது கண்ணியமான வாழ்வை உறுதி செய்வது அவசியமாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக