செவ்வாய், 31 ஜூலை, 2012

நெருங்கிய நண்பர்களாக மாறி விட்ட சிறுத்தையும் நாயும்!

மிருகக் காட்சிச் சாலை ஒன்றில் சிறுத்தைக் குட்டியும் லபறேர்ரர் இன நாயும் ஒரு வருடமாக மிகச் சிறந்த நண்பர்களாக உள்ளனர்.
எட்டு வாரங்களான சீட்டா இன சிறுத்தைக் குட்டியும் 16 வாரங்களான லபறேர்ரர் இன பெண் நாயும் முதன் முதலில் சிறந்த நண்பர்களாக அறிமுகமாகின.



அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள Busch Gardens என்ற மிருகக் காட்சிச் சாலையில் தான் மேற்படி இருவரும் சிறந்த நண்பர்களாக உள்ளனர்.

ஒரே அளவு உயரமான இருவரும் கடந்த ஒரு வருடமாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். கூடப் பிறந்த சகோதரங்கள் போல சீட்டாவும் நாயும் பூங்காவில் வலம் வருவது பார்வையாளர்களுக்கு திகைப்பை ஏற்படுத்துகின்றது.

குறித்த மிருகக் காட்சிச் சாலையின் மேலாளரான ஸ்மித் கருத்துத் தெரிவிக்கையில், ஆண்சீட்டாக்கள் சமூக மயமாக இயல்பிலேயே சேர்ந்து வாழும் தன்மை கொண்டவை.

ஆனால் இங்கே உள்ள சிறுத்தைக்கும் நாய்க்கும் இடையிலான உறவு அற்புதமானது. இவைகள் வாழ்க்கையிலும் ஒன்றாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது என்றார்.




Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல