பெயர் சி எம் ஆர் தமிழ் வானொலி. வாரத்தில் ஏழு நாளும் தமிழில் நடைபெறுகிறதாம்.ஆனால் தமிழை ஒழுங்காக கேட்க முடிவதில்லை. தமிழில் சொல்லக்கூடிய வார்த்தைகளையே அவசியமற்ற முறையில் ஆங்கிலத்தில் சொல்லுகிறார்கள். ஆனால் வெதுப்பகம், காணொளி என்றெல்லாம் வன்னித்தமிழும் சொல்லுகிறார்கள். விளம்பரங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே அறிவிக்கப்படுகின்றன. செசாமி ஒயில் திறீ நைன்ரினைன். தமிழர்களுக்குத்தானே இந்த விளம்பரம். நல்லெண்ணை விலை மூன்று தொண்ணூற்றொன்பது அழகாகத் தமிழிலில் சொன்னால் நேயர்கள் கோபிப்பார்களோ? செசாமி ஒயில் என்று எத்தனை பேருக்குக் சொல்லி வழக்கம். தமிழர்கள் ஜிஞ்சிலி ஒயில் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஒருவர் மீன் குழம்பு எப்படி வைப்பது என்று செய்முறை சொல்லுகிறார். காளிக்கையும் ஜிஞ்சரையும் சேர்த்து நல்லா கிறைண்ட் பண்ண வேணும். உள்ளியையும் இஞ்சியையும் நன்றாக அரைத்தெடுக்கவேண்டும் என்று தமிழில் சொன்னால் உரிமப் பிரச்சனையாகிவிடுமோ? நம்ம நாட்டிலை மீன் குழம்புக்கு எங்கையப்பா செய்முறையிருக்கு? மீன் மிளகாய்த்தூள்,உப்பு, தேங்காய்ப்பால், எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக அவித்தால் மீன் குழம்பு, இதுக்குள்ளை மண்சட்டி, தேங்காய்ச்சிரட்டை அகப்பை என்றெல்லாம் விளக்கம் வேறு! இறுதியில் புட்டுக்கு மணியா இருக்கும் என்றார் மீன்குழம்பு ஸ்பெசலிஸ்ற். அதென்ன புட்டு,அதென்ன மணி, பிட்டு என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன புட்டு சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்தாரா? அல்லது புட்டுக்கு மண் சுமந்தாரா?அதென்ன மணி? டிங் டிங் என்று ஒலி வருமோ? ஒன்றில் தமிழை அழகாகப் பேசுங்கள் அல்லது ஆங்கிலத்தை சரியாகப் பேசுங்கள். உலகத்திலேயே யாழ்ப்பாணத்தவர்தான் அழகாகத் தமிழ் பேசுபவர்கள் என்று பீற்றிக் கொள்கிறீர்கள். ஆனால் நீங்கள் பேசுவது தமிழா?
இன்னொருவர் ஒரு கடையில் நின்றுகொண்டு விளம்பரம் செய்கிறார். சிறீலங்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நண்டுப்பெட்டி பொக்ஸ்! இதென்னடா இது பெட்டி வேறு பொக்ஸ் வேறா? நடுச்சென்ரர், பயப்பீதி, மூலைக்கோணர் என்றெல்லாம் யாழ்ப்பாணத்தான் புதுப்பாஷை பேசுகிறான். இதை நல்ல தமிழ் என்கிறான். உதயகீதம் படத்திலை கவுண்டமணி நகைச்சுவை ஞாபகம் வருகிறது. சாமி இந்த உண்டியலிலை சேருகிற பணத்தை வச்சு என்ன பண்ணிறீங்க? பூவும் புஷ்பமும் வாங்கினதுபோக மீதிப் பணத்திலை அண்ணாநகரிலை ஒரு வீடு வாங்கியிருக்கிறேன். என்னது பூவும் புஷ்பமுமா? பூ வேறை புஷ்பம் வேறையா என்று கவுண்டமணி கேட்பார். அதுபோல பயம் வேறை பீதி வேறையா? இந்த அரசியல் ஆய்வாளர்கள் பயப்பீதி என்ற சொல்லைப் பாவிப்பார்கள்.
இந்த சி.எம்.ஆர் ரமில் வானொலியில் இந்த அறிவிப்பாளர்களின் இம்சை பெரிய இம்சை. ராம் பிரசாந்த் என்பவர் செய்தி வாசிப்பது,விளம்பரங்கள் செய்வது, பேட்டி காண்பது எல்லாமே கே.எஸ்.ராஜா பாணியில்தான். இவருக்கு மூலவியாதி,அல்லது மலச்சிக்கல் ஏதாவது ஒரு நோய் கடுமையாக இருக்க வேண்டும். முக்கோ முக்கென்று முக்குகிறார்.நொடுநொடென்று வாசிக்கிறார். ஏனிந்த அவசரம். ஒவ்வொரு தாக்கத்திற்கும் மறுதாக்கம் உண்டு.சி.எம்.ஆர் செய்திச் சுருக்கம். என்றெல்லாம் வாசிக்கும்போது எரிச்சலூட்டுகிறது. இசை யுவன் ஷங்கர்ராஜா, பாடல் நமுத்துக்குமார் என்று காதில் விழுகிறது. காரணம் இவர் சொல்லுகின்ற வேகம். பாடல் கவிஞர் நா. முத்துக்குமார் என்று நிதானமாக மெதுவாகச் சொல்ல ராம் பிரசாத்துக்கு என்ன பிரச்சனை. எல்லா அறிவிப்பாளர்களுமே வேகமாகத்தான் வாசிக்கிறார்கள். ஒரு பாஷையை ஆறுதலாகவும் நிதானமாகவும் வாசித்தால் கேட்பதற்கு நன்றாக இருக்கும். அதுவும் தமிழை எவ்வளவு ஆறுதலாக உச்சரிக்க வேண்டும்.
இந்தியத் தொலைக்காட்சிகளில் பட்டி மன்றங்களைப் பாருங்கள். கவிஞர் வைரமுத்து,சாலமன் பாப்பையா, பாரதி, ராஜா போன்றவர்கள் தமிழ் பேசும்போது எவ்வளவு அழகாக ரசிக்கக் கூசியதாக இருக்கிறது. அது மட்டுமல்ல இந்தியத் தொலைக்காட்சிகளில் வரும் அறிவிப்பாளர்கள் எவ்வளவோ மேல் என்று சொல்லவேண்டும். அவர்கள் ஆங்கிலச் சொற்கள் கலந்து சில கலந்து அறிவித்தாலும் அவர்களின் நிதானமான அறிவிப்பு கேட்பதற்கு ஆசையாக இருக்கும். விஜய் ரிவி அறிவிப்பாளர்களிடமிருந்து நம்மவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.
புலம்பெயர் நாடுகளில் இயங்கும் தமிழ் வானொலிகளில் கனடாவில் இயங்கும் இளையபாரதியின் சி.ரி.பி.சி மட்டும் தரமானது தனித்துவமானது . இளையபாரதியின் அறிவிப்பும் தமிழ் வசன நடையும் ரசிக்கக் கூடியது. எவ்வளவு நிதானமாகவும் ஆறுதலாகவும் தமிழை உச்சரிக்கிறார்கள். இப்படி அழகாக தமிழை பேசுவதனால்தான் அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீதுக்கு தமிழ்நாட்டிலும் மதிப்பு இருக்கிறது. சில சொற்கள் ஆங்கிலத்தில் சொல்லவேண்டியது தவிர்க்கமுடியாததுதான். அதற்காக சிலோன் விளைமீன் திறீ நைன்ரினைன் என்று சொல்ல வேண்டுமா? கோப்பியைக் கோப்பி என்றுதான் சொல்ல முடியும். அதை வன்னித்தமிழில் கொட்டை வடிநீர் என்றால் அசிங்கமாக இருக்கும்.இலங்கை விளைமீன் இறாத்தல் மூன்று தொண்ணூற்றொன்பது என்று சொல்வதிலும் கஸ்டமா! தொலைபேசி இலக்கங்களயும் தமிழில் சொல்லலாமே! எதுவுமே விளங்கவில்லை.. அது எப்படி பூனகரி மொட்டைக் கறுப்பன் அரிசி, வட்டுக்கத்தரிக்காய் என்பதை மட்டும் தமிழில் சொல்லி அதன் விலையை நைன்ரினைன் சென்ற்ஸ் என்று சொலவது உங்களுக்கு அசிங்கமாகப் படவில்லை!? அதை ஆங்கிலத்தில் சொல்லத் தெரியாதோ? ஏன் பூனகரி போல்ட் ஹெட் பிளக் மான் றைஸ் (POONERYN BALD HEAD BLACKMAN RICE )என்று சொல்லலாம்.
ஆனால் நடிகர் தனுஷ் சினிமாவிற்காக வை திஸ் கொலைவெறி என்று பாடல் எழுதியதற்காக யாழ்ப்பாணத்தார்கள் தமிழ் கொலை செய்யப்படுகிறது எவ்வளவு விமர்சனம் செய்தார்கள். நம்புங்கள் நாளை தமிழீழம் மலரும் புலிகளின் கழுத்தில் மாலைகள் தொங்கும் என்று கவிதை எழுதிய காத்தமுத்து சிவானந்தன் (காசி ஆனந்தன்) தமிழ் கொலை செய்யப்படுகிறதென்று எவ்வளவு காட்டமாகக் விமர்சித்தார். என் தாய்மொழி தமிழ்மொழி மேல் உனக்கேன் கொலை வெறிடா என்று யாழ்ப்பாணத்திலிருந்து ஒருவர் பாடல் கூட பாடினார். ஆனால் இங்கு என்னடாவென்றால் நண்டுப்பெட்டி பொக்ஸ் என்கிறார்கள். செசாமி ஒயில்,சிலோன் விளைமீன் திறீநைன்ரி நைன் என்று விளம்பரம் செய்கிறார்கள். சரி உங்கள் பாணியில் செய்யுங்கள். ஆனால் தமிழ் வானொலி என்று மட்டும் சொல்லாதீர்கள். சி.எம்.ஆர் போல இன்னொரு வானொலி. இரண்டுக்கும் வித்தியாசமில்லை. பெயர் “தமிழ் வண்!” ஆனால் “தமிழ் புண்” என்றே அழைக்கலாம். ரி.வி.ஐ,தமிழ் வண் தொலைக்காட்சிகளும் விதி விலக்கல்ல. ஆங்கிலத்தைக் கலந்து பேசுங்கள். ஆனால் தமிழ் வானொலி அல்லது தமிழ் தொலைக் காட்சி என்று என்று மட்டும் சொல்லாதீர்கள். நூற்றுக்கணக்கானோர் உங்கள் வானொலியைக் கேட்கிறார்கள். நீங்கள் ஆங்கிலம் கலந்து பேசினால் இளைய தலைமுறையினர் எப்படி தமிழைக் கற்றுக் கொள்வார்கள். விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அதனால் இந்த விமர்சனத்தை முன்வைக்கிறோம். இது காழ்ப்புணர்வு அல்ல. சி எம் ஆர் தமிழ் வானொலி என்று சொல்லாமல் சி எம் ஆர் மிக்ஸ் என்று பெயரை மாற்ரினால் பொருத்தமாக இருக்கும்.
வாழ்க ரமில் தேசியம்.
சலசலப்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக