வியாழன், 30 ஆகஸ்ட், 2012

மழைவரும்போது ஏற்படும் அறிகுறி யாது?

குழந்தைகள் சமூகத்தில் இருந்து கற்றுக் கொள்கிறார்கள் என்பது கல்வி உளவியலாளர் களின் முடிபு. எனவே, சமூகம் என்பது பிள்ளைகளின் கற் றலுக்கான களம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. பிள்ளைகள் கற்றுக் கொள்கின்ற சமூகச் சூழல் என்பது தூய்மையானதாக இருக்க வேண்டும். மாறாக வன்முறைகள், வன் சொற்கள், அடிதடிகள், துர்நடத்தைகள், கெட்ட வார்த்தைப் பிரயோகங் கள் இருக்கக்கூடிய சமூகம் ஒன்றில் வளரும் பிள்ளைகள் அத்தகைய பழக்கங்களுக்கு இயை படைந்து விடுகின்றனர். இதன்காரணமாக இத்தகைய பழக்கங்களைக் கண்டு அவர்கள் ஒருபோதும் வெட்கம் அடை வதில்லை.

இத்தகைய நிலைமை மிகவும் மோசமானது. பிள்ளைகள் சமூகத்தில் இருந்து கற்றுக் கொள் கிறார்கள் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் இது. தரம் 2இல் கற்கக்கூடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிள்ளையயான்று கொழும்புக்குச் சென் றிருந்தது. தனது உறவினரான ஆசிரியர் ஒருவர் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு நடத்தும் பிரத்தியேக வகுப்பிலும் அந்தப் பிள்ளை கலந்து கொண்டது. அந்த ஆசிரியர் நடத்திய குறு வினாப் பரீட்சை யில் ‘மழை வரும்போது ஏற்படும் அறிகுறிகள் யாவை?’ என்று ஒரு கேள்வி. இந்தக் கேள்விக்கு பதிலளித்த பிள்ளைகள்: மேகம் கறுக்கும்; மின்னல் மின்னும்; இடி முழங் கும்... இப்படி எழுதினார்கள்.

இதேவிடைகளை எழுதிய யாழ்ப்பாணத்துப் பிள்ளை, கூடவே இன்னோர் காரணத்தையும் எழுதியது. அந்தக் காரணம் ‘மின்சாரம் தடைப் படும்’ என்பதாகும். இந்த விடையைக் கண்ணுற்ற ஆசிரியர் அதிர்ந்து போனார். மழை வருவதற்கு முன்னதாக மின்சாரம் தடைப்படும் என்ற காரணம் குறித்து அந்தப் பிள்ளையிடம் வினவினார்.

ஆசிரியர்: மழை வரும்போது மேகம் கறுக்கும்; மின்னல் மின்னும்; இடிமுழங்கும். இவையயல்லாம் சரி. மின்சாரம் தடைப்படும் என ஏன் எழுதினீர்கள்?

மாணவர்: எங்கட யாழ்ப்பாணத்தில் இப்படித் தான் சேர்! மழை பெய்வதற்காக வானம் இருட்டி விட்டாலே மின்சாரம் தடைப்பட்டு விடும். மழை சிறிதாக துமிக்கத் தொடங்கினால் போதும் மின்சாரம் வரவே வராது.

ஆசிரியர்: ஏன்அப்படி?

மாணவர்: என்ன சேர்? இதுகூடவா உங்களுக்குத் தெரியாது. மழைத்துமியில் மின்சாரக் கம்பிகள் நனை ந்து விடுகின்றன.அதனால் மின்சாரத்திற்கு ஒரே சளிசுரம். பாவம் அது என்ன செய்யும்?

ஆசிரியர்: அடேங்கப்பா! யாழ்ப்பாணத்தில் அப்படியா நடக்கிறது?

மாணவர்: அதுமட்டமல்ல சேர்! பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி மின்சாரத்திற்கு சிகிச்சை அளிப்பார்கள்.இருந்தும் இன்னமும் குறையவில்லை. இனி மாரிகாலம். பாவம் எங்கட மின்சாரம். மழையில் நனைந்து குளிரில் உறைந்து விடும்.நாங்கள் இருட்டில் சீவியம் நடத்துவோம் இப்படி அந்தப் பிள்ளை கூறியது.

பார்த்தீர்களா? யாழ்ப்பாண மின்சாரம் பற்றி அந்தப் பிள்ளை எப்படிக் கற்றுக் கொண்டது என்று. இப்படித்தான் எல்லாமும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல