திங்கள், 27 ஆகஸ்ட், 2012

பிரபல மலையாள நடிகர் திலகனுக்கு மாரடைப்பு

பிரபல மலையாள நடிகர் திலகன். இவர் தமிழில் சத்ரியன், மேட்டுக்குடி, அலிபாபா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். திலகனுக்கும் மலையாள நடிகர் சங்கத்துக்கும் மோதல் ஏற்பட்டு கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து திலகனுக்கு சினிமாவில் நடிக்க தடையும் விதிக்கப்பட்டது. இதனால் மேடை நாடகங்களில் நடித்து வந்தார்.

அண்மையில் கூட ஒரு பிரபல இதழ் சார்பில் ஃபெஸ்ட் சப்போர்டிங் ஆர்டிஸ்ட்
வழங்க முன் வந்த போது “” அது என்னய்யா சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட்? ஃபெஸ்ட் ஆர்டிஸ்ட் அவார்ட் குடு அல்ல்து இந்த சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லு”” என்று கூறி விரட்டி விட்டார்.

இந்த நிலையில் திலகனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. திலகன் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மாரடைப்புடன் திலகனுக்கு பக்கவாத நோயும் ஏற்பட்டுள்ளது. அவரது மூளை நரம்புகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல