புதன், 19 செப்டம்பர், 2012

முள்ளிவாய்க்கால் புதை குழிகளுக்கு மேல் படரும் ஒருவகை பச்சை பாசிகள் !

2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 40,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதோடு, வீரச்சாவடைந்த போராளிகள் பலரின் வித்துடல்களையும் புலிகள் அவ்விடத்திலேயே விதைத்தார்கள். மிகவும் நேர்த்தியாக குழிகள் வெட்டப்பட்டு போராளிகளின் வித்துடல்களும், பொதுமக்களின் உடல்களும் புதைக்கப்பட்டது. முள்ளிவாய்க்காலுக்கு மேல் 2009ம் ஆண்டு இறுதியில் எடுக்கப்பட்ட கூகுள் சட்டலைட் படத்தோடு, தற்போது எடுக்கப்பட்ட படங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவ்விடத்தில் புதைகுழிகள் எதுவும் காணப்படவில்லை. இந்த நிலத்தில் இருந்த புதைகுழிகள் பல அகற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. முள்ளிவாய்க்கால், ரெட்டமுள்ளிவாய்க்கால், மற்றும் புதுமாத்தளானில் இருந்த பல புதைகுழிகள் தற்போது அவ்விடத்தில் இல்லை.

2009ம் ஆண்டு, இப்பகுதிகளை கூகுள் சட்டலை மூலம் (இலவசமாக) படமாக எடுத்து வன்னி மீடியா இணையம் வந்தது. தற்போது 3 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், இப் பகுதிகளை மீண்டும் கூகுள் ஏத் சட்டலைட் மூலம் பார்க்கும் போது அங்கே நடைபெற்றுள்ள பாரிய மாற்றங்கள் புலனாகியுள்ளது. பல கட்டடங்கள் தகர்கப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. பல புதிய இராணுவ தளங்கள் உருவாகியுள்ளது. இதற்குமேலாக அப்பகுதியில் இருந்த பெரும்பாலான புதைகுழிகள் அகற்றப்பட்டுள்ளது. அவ்விடங்களில் சிலவகையான பாசிகள் படர்ந்துள்ளது. இவை இயற்கையான பாசி தானா, இல்லையேல் புதைகுழிகளில் உள்ள எலும்புகளை உருக்கி அழிக்க, பச்சை நிற திராவகங்களை இலங்கை இராணுவம் ஊற்றியுள்ளதா என்ற சந்தேகங்களும் நிலவுகிறது.

(அதாவது ஆகாயத்தில் இருந்து பார்க்கும்போது, மரங்களும் செடிகொடிகளும் பச்சையாகவே தெரியும். இருப்பினும் கூகுள் ஏத் தற்போது கிரவுன் -வியூ என்ற தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இதனூடாக தரையை நாம் சுமார் 10 மீட்டர் உயரத்தில் இருந்து பார்ப்பது போலவும் பார்க்க முடியும். இவ்வாறு மிகவும் உற்றுநோக்கி நிலத்தைப் பார்க்கும்போதே, இந்த பச்சை படலம் தெரிகிறது)

உலகமே முள்ளிவாய்க்காலை மறந்தாலும் கூகுள் சட்டலைட் அவ்விடத்தையும், நடந்த கொடுமைகளையும் இன்னும் மறக்கவில்லை. பல புகைப்படங்களோடு இன்னும் அது பூமிக்கு மேலே நிலைகொண்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல