செவ்வாய், 16 அக்டோபர், 2012

காதலுக்கு கண் இல்லை என்பது இதுதான் (திருமண படங்கள் இணைப்பு)

கண்களை போரில் பறி கொடுத்த இராணுவ வீரரிடம் இதயத்தை பறி கொடுத்த அழகி!

பொதுவாக காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள்.


ஆனால் இறுதி யுத்தத்தில் இரு கண்களையும் பறிகொடுத்த இராணுவ வீரர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து உள்ளார் யுவதி ஒருவர்.

மணமகன் லன்ஸ் கோப்ரல் அஞ்சன கருணாசிறி. மணமகள் நிரஷா டுலுக்‌ஷி. கடந்த வெள்ளிக்கிழமை கம்பஹாவில் இடம்பெற்றது.

இராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் இத்திருமணத்தில் பங்கேற்று இருந்தனர்.

2009 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் திகதி முல்லைத்தீவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மோட்டார் தாக்குதலில் லான்ஸ் கோப்ரல் அஞ்சன கருணாசிறி இரு கண்களையும், கை விரல் ஒன்றையும் பறி கொடுத்தார்.

இவர் ராகமை ரணவிரு செவன புனர்வாழ்வு நிலையத்துக்கு மாற்றப்பட்டார். இப்புனர்வாழ்வு நிலையத்துக்கு அன்பளிப்பு மேற்கொள்ள வந்த 26 வயது யுவதிதான் டுலுக்‌ஷி. இவருக்கு அஞ்சனவுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மலர்ந்தது. வீட்டுக்காரர்களின் சம்மதத்துடன் அஞ்சனவை திருமணம் செய்து உள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல