புதன், 31 அக்டோபர், 2012

`கறுப்பு சாக்லேட்' ஒரு வரப்பிரசாதம்!

அதிக அபாயத்தை எதிர்நோக்கியிருக்கும் இதய நோயாளிகள் தினசரி சிறிது கறுப்பு சாக்லேட் வீதம் 10 ஆண்டுகளுக்குச் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பையும், பக்கவாதத்தையும் தடுக்கலாம் என்று அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மெல்போர்ன் மோனாஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அந்த ஆய்வாளர்கள், அந்நாட்டைச் சேர்ந்த 2 ஆயிரத்து 13 பேரை ஆய்வுக்கு உட்படுத்தி, ஆய்வின் முடிவில், 70 சதவீதம் அல்லது அதற்கு மேல் `கோகோ' கலவை உள்ள சாக்லேட்டை தினசரி 100 கிராம் அளவுக்குச் சாப்பிடுவது, இதய அபாயத்தை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கும் என்கிறார்கள்.

இதுதொடர்பாக முன்னணி ஆய்வாளரான எல்லா ஸோமர், உயிரைப் பறிக்கும் 70 இதய பாதிப்புகள், உயிரைப் பறிக்காத 15 இதய பாதிப்புகள், 10 ஆண்டுகளுக்கு மேலாக கறுப்பு சாக்லேட் சாப்பிடும் 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு முற்றிலுமாகத் தவிர்க்கப்படும் என்று கண்டுபிடித்திருப்பதாகக் கூறுகிறார்.

``தொடர்ந்து 10 ஆண்டுகாலம் தினசரி 100 கிராம் கறுப்பு சாக்லேட் சாப்பிடுவதால் என்னென்ன ஆரோக்கிய அனுகூலங்கள் ஏற்படக் கூடும் என்று நாங்கள் கணித்திருக்கிறோம். அதிக `ரிஸ்க்' உள்ள இதயவியாதிக்காரர்களுக்கு மருந்துரீதியான சிகிச்சையை விட `கறுப்பு சாக்லேட் தெரபி' நல்ல பலனைக் கொடுக்கும் என்று எங்கள் ஆய்வு முடிவுகள் தெரியப்படுத்தியிருக்கின்றன'' என்கிறார் ஸோமர்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல