பிறந்த 5 நாளில் அம்மாவை பறிகொடுத்ததால் குறைமாதத்தில் பிறந்த குழந்தையுடன் ரிஷா ஓட்டிய அப்பாவின் பரிதாப கதை ஊடகங்களில் வெளியானதால் அவருக்கு ரூபா 18 இலட்சம் உதவி நிதி குவிந்துள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கைக்குழந்தை உடல் நிலை தேறியதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரை சேர்ந்த ரிக்ஷாகாரர் பப்லு. இவரது மனைவிக்கு கடந்த செப்டம்பரில் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குறைமாதத்தில் பிறந்ததால் 2 கிலோ எடை மட்டுமே இருந்த அந்த குழந்தைக்கு தாமினி என்று பெயர் சூட்டினர்.
பிறந்த 5 நாளில் தாயை இழந்தாள் குழந்தை தாமினி. குழந்தையை கவனிக்க கூட உறவினர் யாரும் இல்லாததால் பப்லு தவித்தார். சில நாட்கள் ரிக்ஷாஓட்டாமல் வீட்டிலேயே இருந்து குழந்தையை பார்த்துக் கொண்டார். கையில் பணம் இல்லாததால் மீண்டும் ரிக்ஷா ஓட்ட பப்லு முடிவு செய்தார். இதனால், குழந்தை தாமினியை தன் உடலோடு சேர்த்துக் துணியால கட்டிவைத்துக் கொண்டு ரிக்ஷா ஓட்டினார். தாய்பால் கிடைக்காததால் தாமினியின் உடல் நிலை மோசமானது. அழுவதற்கு கூட சக்தி இல்லாமல் துவண்டு கிடக்கும் தாமினியை உடலில் கட்டிக்கொண்டு அவர் ரிக்ஷா ஓட்டுவது ஊடகங்களில் கடந்த மாதம் வெளியானது.
இது பற்றிய பற்றிய தகவல் கிடைத்ததும், தாமினியை உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்க்க ராஜஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்தது. கடந்த மாதம் 21ஆம் திகதி ஜெய்ப்பூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தாமினி சேர்க்கப்பட்டாள். இதற்கிடையே, தாமினியின் பரிதாப நிலையை பார்த்து ஏராளமானோர் நிதிவழங்க தொடங்கினர். இதுவரை ரூபா18 இலட்சம் நிதி சேர்ந்துள்ளது. அவளுக்கு இலவச கல்வி அளிக்க பல முன்னணி கல்வி நிறுவனங்கள் முன் வந்துள்ளன. தாமினியை எங்களிடம் கொடுங்கள் நாங்கள் வளர்க்கிறோம் என்று தொண்டு நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. ஆனால், அதற்கு பப்லு மறுத்துவிட்டார்.
முன்னர் வெளியான செய்தி
தனது குழந்தையை சுமந்தபடி ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக