செவ்வாய், 6 நவம்பர், 2012

குடும்பம் குதூகலமாக இருக்க......

* வாரத்தில் ஒரு நாளேனும் ஒரு முறையேனும் எல்லோரும் சேர்ந்து
அமர்ந்து சாப்பிடுங்கள். அன்றைக்கு மட்டும் உங்கள் வீட்டு டி.வி. ரிமோட்டை
ஜன்னல் வழியாக வெளியே வீசி எறிந்து விடுங்கள்.
-
*குடும்பத்தினரிடம் நீங்கள் பழகும் விதமும் மற்றவர்களிடம் பழகும்
விதமும் எவ்வளவு வேறுபடுகிறது என்பதை சிந்தித்து பாருங்கள்.
பைசா பிரயோஜனம் இல்லாத வெளி ஆட்களிடம் காட்டும் அன்பையும்
சிரித்த முகத்தையும் கொஞ்சம் நம் வீட்டாரிடமும் காண்பிக்கலாமே.


-
சிறு சிறு வழிகளில் உங்கள் அனபை வெளிக்காட்டுங்கள்.
அவ்வப்பொழுது சின்னச்சின்ன பரிசுகளை ரகசியமாக வாங்கி
கொடுக்கலாம்.

-
* வீட்டாருடன் முடிந்த பொழுது சுற்றுலா சென்று வாருங்கள்.
காஷ்மீர் தான் போக வேண்டுமென்பதில்லை. பக்கத்தில் இருக்கும்
பெரிய ஊருக்கு போய் இரண்டு நாட்கள் சும்மா இருங்கள்.
-
* குடும்பாத்தாரின் பிறந்த நாளை கண்டிப்பாக நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள். கொண்டாடத் தவறாதீர்கள்.

-
*வீட்டை சுத்தமாக வைத்திருப்பது மனைவியின் வேலை என்று
கருதாதீர்கள். பெரும்பாலான குப்பைகளுக்கு காரணம் நீங்கள் தான்
என்பதை உணர்ந்து, கொஞ்சம் உதவுங்கள்.


* கணவன் மனைவி இருவரும் தினமும் உங்களுக்கு என்று சற்று
நேரம் ஒதுக்கி, தியானம், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவற்றை
செய்து வாருங்கள். இதனால் உங்கள் மன அழுத்தம் குறையும்,

மற்றவர்களிடம் அன்பும், நிதானமும் கூடும். ஹெட்போன் போட்டு
கொண்டே வாக்கிங் சென்றால் உடம்புக்கு நல்லது. காதுக்கு கெடுதல்.
-

* ஒரே ஒரு நாள் கணவரை சமைக்க சொல்லுங்கள். அத்தனையும்
வேஸ்ட் பாக்ஸிக்குள் போனாலும் பரவாயில்லை.
-

*மற்றவர்கள் மீது உங்களுக்கு இருக்கும் அன்பையும், அக்கறையையும்
மனத்திற்குள்ளேயே வைத்து கொள்ளாமல் அவ்வப்பொழுது கனிவான
வார்த்தைகள் மூலமும் சிறு சிறு செய்லகள் மூலமும் வெளிப்படுத்துங்கள்.
அது உங்களுக்கு வட்டியுடன் திரும்ப கிடைக்கும் பாருங்கள்.
-

* மற்றவர்களது அந்தரங்கத்தை மதியுங்கள். ஒருவரது இமெயில்,
பேஸ்புக், போன் கால்கள் போன்றவற்றை துருவி துருவி ஆராய்ந்து
தவறு கண்டுபிடிக்காதீர்கள். அவரவருக்கு கொஞ்சம் ரகசியம் இருந்து
விட்டுத்தான் போகட்டுமே.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல