சனி, 10 நவம்பர், 2012

முட்டாள் பட்டம் வாங்கிய அமெரிக்க பெண் சாரதி. (படம், காணொளி இணைப்பு)

அமெரிக்காவில் உள்ளக்லீவ்லாண்டில் வாகனத்தை வீதியில் ஓட்டிச் சென்றதாக குற்றம்சாற்றப்பட்ட பெண் முட்டாள் என அடையாளப் படுத்தி இரண்டு நாட்கள் நிற்க வேண்டும் என அந்த மாகாண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒஹியோவில் - க்லீவ்லாண்டு மாகாணத்தில் 32 வயதுடைய ஷினா ஹார்டின் என்ற பெண் ஒருவர் நடைபாதையில் வாகனத்தை ஓட்டிச் சென்ற காட்சி அந்த சாலையில் பொருத்தப் பட்டிருந்த கமராவில் பதிவாகியிருந்தது. இதனை அடுத்து அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

விசாரணையில் பாடசாலை மாணவர்களை வெகு நேரமாக வரிசையில் ஏற்றிக் கொண்டிருந்ததால் அருகே இருந்த நடைபாதையில் வாகனத்தை செலுத்தியதாக அவர் விளக்க மளித்திருந்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, ஷினா ஹார்டின் இரண்டு நாட்கள் ஒரு மணி நேரத்திற்கு முட்டாள் என எச்சரிக்கைப்படுத்தும் அடையாளத்தை கொண்டு நிற்க வேண்டும் என உத்தர விட்டார்.



Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல