திங்கள், 10 டிசம்பர், 2012

நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை

ஹாங்காங்கில் ஒரே நேரத்தில், 300 நாய்களுக்கு பல் துலக்கப்பட்டு, கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.நாய்களின் காப்பகத்துக்கு நிதி திரட்டவும், சுகாதாரத்தை மேம்படுத்தவும், ஹாங்காங்கில் நேற்று, செல்ல பிராணிகளுக்கு பல்துலக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 312 பேர், தங்கள் நாய்களை அழைத்து வந்து, பிரத்யேக பிரஷ் மற்றும் பற்பசை கொண்டு, நாய்க்கு பல்துலக்கினர்.இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த, ஹில்டா வாங் என்ற பெண் கூறியதாவது:

எஜமானர்கள் தங்கள் நாய்களின் உணவு மற்றும் அதன் ரோமத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்கின்றனர். ஆனால், நாய்களின் பற்கள் விஷயத்தில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. வாரத்திற்கு ஒரு முறையாவது, தங்கள் செல்ல நாய்களுக்கு பல் துலக்க மறக்கக்கூடாது. நாய்களுக்கு தினமும் பல்துலக்கினால், அதன் சுகாதாரம் மேம்படும்.

இவ்வாறு, ஹில்டா வாங் கூறினார்.நாய்களின் பற்களை தூய்மை செய்த இந்த நிகழ்ச்சி, கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்குமாதத்திற்கு பிறகு, இது தொடர்பாக கின்னஸ் நிறுவனம், சான்றிதழ் அளிக்க உள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல