வியாழன், 20 டிசம்பர், 2012

மனைவி தேவை

வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை நாளிதழ்களிலும், கம்பெனிகளின் வாசல்களிலும் பார்த்திருப்போம். ஆனால் ‘மனைவி தேவை' என்ற விளம்பரப்பலகையை கழுத்தில் மாட்டிக்கொண்டு பொது இடங்களில் நின்று கொண்டிருக்கிறார் முதியவர் ஒருவர்.

சாண்டி மிக்கோலச் என்ற அந்த முதியவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவருக்கு 82 வயதாகிறது. தனக்கு ஒரு நல்ல பெண் துணை வேண்டுமெனக் கோரி அதற்கென எழுதப்பட்ட ஒரு அட்டையை தனது கழுத்தில் மாட்டி அவர் விளம்பரம்படுத்தியும் வருகிறார்.

இவர் தனது 40 வயதிற்குள்ளேயே மூன்று திருமணங்கள் செய்து விவகாரத்து செய்துவிட்டார். இப்போது வயதான காலத்தில் தனிமையில் தவிப்பதால் துணை தேடுகிறார் மிக்கோலச். வாழ்க்கையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று இப்போது நன்றாக கற்றுக்கொண்டு விட்டதாகவும் கூறுகிறார்.

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 60 வயதுக்கு மேலும், புத்தகம் படிப்பவராகவும் மற்றும் நகைச்சுவை உணர்வு உள்ளவராகவும் இருக்கவேண்டும் என்று கூறி வருகிறார் இந்த தாத்தா.

பொதுவாக ஒருவர் 20 அல்லது 25 வயதில் பல காரணத்திற்காக திருமணம் செய்துகொள்ள பெண் தேடுகிறார்கள். ஆனால் 82 வயதில் தோழமைக்காக 60 வயதுக்கு மேலுள்ள ஒரு துணையை தேடி வருகிறார் இந்த அமெரிக்க தாத்தா.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல