செவ்வாய், 11 டிசம்பர், 2012

குழந்தை அழுதா பீர் கொடுங்களேன்!

குழந்தை அழுதா உட்வார்ட்ஸ் குடுக்கச் சொல்லுச்சு நீ குழந்தையா இருக்கப்ப நான் அதான் கொடுத்தேன் என்று விளம்பரத்தில் அட்வைஸ் செய்யும் அம்மாக்களை பார்த்திருப்போம். ஆனால் குழந்தைகளுக்கு குளிர் காலத்தில் ஏற்படும் சளித் தொல்லை மற்றும் இருமல் போன்ற நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க பீர் கொடுப்பது நல்லது என்று ஜப்பான் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இது அதிர்ச்சியளிக்கக் கூடிய தகவல்தான் ஆனால் ஆய்வாளர்கள் சொல்வதைப் பார்த்தால் இதில் உண்மை இருப்பது போலவும் தெரிகிறது.

ஜப்பானை சேர்ந்த சபோரா மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பீரில் உள்ள ஒரு வகை மூலப்பொருள் நோயை தடுக்கிறது என்று கண்டறிந்துள்ளனர்.

தாவர வகையிலிருந்து தயாரிக்கப்படும் பீர் பானத்தில் ‘ஹுமுலோன்'என்ற முக்கிய மூலப்பொருள் உள்ளது. பீரின் கசப்பு சுவைக்கு இதுதான் காரணம். இது சிறுவர்களுக்கு ஏற்படும் நிமோனியா, மார்புச்சளி போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிக்கு எதிராக செயல்படுகிறது என்று சப்போரோ புரூவரீஸ் நிறுவன ஆய்வாளர் ஜுன் புஜிமோடோ கூறியுள்ளார்.

ஆர்எஸ் வைரஸ் (ரெஸ்பிரேட்டரி சின்சைடியல் வைரஸ்) என்ற ஒரு வகை வைரஸ்தான் கடுமையான நிமோனியா, சுவாச பிரச்னைகளை குழந்தைகளுக்கு ஏற்படுத்துகின்றன. இந்த வகை வைரஸ் குளிர்காலத்தில் அதிகமாக பரவி பெரியவர்களுக்கும் கூட சளி பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இதற்கு இதுவரை தடுப்பு மருந்து இல்லை. இந்த வைரஸை "ஹுமுலோன்" கட்டுப்படுத்துகிறது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது

பீர் பானத்தில் மிகக் குறைந்த அளவிலேயே "ஹுமுலோன்" உள்ளது. ஒருவர் 30 கேன் பீர் குடித்தால்தான் இந்த வைரஸை எதிர்க்கும் அளவுக்கு எதிர்ப்பு சக்தி உருவாகும். எனவே, இந்த "ஹுமுலோன்" மூலப்பொருளை உணவுப் பொருட்கள் மற்றும் ஆல்கஹால் கலக்காத பொருட்கள் மூலம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. அதன் கசப்பு சுவையை குழந்தைகள் ஏற்க செய்வதும் சவாலாக உள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

தீக்காயத்தை தணிக்கும் வல்லமையும் "ஹுமுலோன்" மூலப் பொருளுக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் ஆய்வாளர் புஜிமோடோ தெரிவித்தார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல