புதன், 6 பிப்ரவரி, 2013

சிறுமிகளை கறபழித்த காமக் கொடூரனுக்கு 115 ஆண்டு ஜெயில் 50 சவுக்கடி! (படங்கள் இணைப்பு)

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆசாமிக்கு 115 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 50 கசையடிகள் தர மலேசிய நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலேஷியா நாட்டில் உள்ள சபா பகுதியை சேர்ந்தவன் ரபிதின் சடிகர் (42), கடந்த 2009-ம் ஆண்டு 9 வயது சிறுமியை கற்பழித்த குற்றத்துக்காக சிறை தண்டனை அனுபவித்தவன். தண்டனை காலம் முடிந்து விடுதலையான பின்னர், கத்தி முனையில் 16 வயது பெண்ணை மிரட்டி கற்பழித்த குற்றத்துக்காக இவனை போலீசார் தேடி வந்தனர்.

இதனால், சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு இடத்துக்கு சென்ற பின்னும் இவனது சேட்டை குறையவில்லை. பிழைக்கப் போன இடத்தில் ஒரு 8 வயது சிறுமியையும், பின்னர் 17 வயது இளம்பெண்ணையையும் வழக்கமான பாணியில் இவன் மிரட்டி கற்பழித்துள்ளான்.

மேலும், ஒரு சிறுவனை மிரட்டி ஓரினச்சேர்க்கையிலும் ஈடுபட்ட இவனை போலீசார் கைது செய்து ரவ்ப் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. ஆனால், தன் மீதான பலாத்கார குற்றச்சாட்டுகளை ரபிதின் மறுத்து வாதாடி வந்தார். இந்நிலையில், ராப் நகர நீதிமன்றம் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறியது. இதில் ரபிதினுக்கு 115 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 50 கசையடிகள் தர உத்தரவிடப்பட்டுள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல