செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

மூத்த மகளை 3வது மனைவியாக்கி குழந்தை பெற்று, 2வது மகளை கற்பழிக்க முயன்ற காமக்கொடூரன்

தேனியில் மூத்த மகளை மூன்றாவது மனைவியாக்கி குழந்தை பெற்ற நபர் தனது இளைய மகளை கற்பழிக்க முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பாண்டி(40). அவரது மணைவி ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தவுடன் இறந்துவிட்டார். இதையடுத்து பாண்டி இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தார். இரண்டாவது மனைவி ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

பாண்டி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பழனி, கொடைக்கானல், வத்தலக்குண்டு என்று ஊர் ஊராகச் சென்று வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவரது இரண்டாவது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இதையடுத்து அவர் 21 வயதாகும் தனது மூத்த மகளை மூன்றாவது மனைவியாக்கினார். அவர்களுக்கு தற்போது இரண்டரை வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

தற்போது கூடலூரில் ஒரு தோட்டத்து வீட்டில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வரும் அவர் 14 வயதாகும் தனது இரண்டாவது மகள் அதாவது இரண்டாவது மனைவியின் மகளை கற்பழிக்க முயன்றார்.

 இதில் பயந்துபோன அந்த சிறுமி காமக்கொடூர தந்தையின் பிடியில் இருந்து தப்பித்து எரசக்க நாயக்கனூரில் உள்ள பாண்டியின் அக்கா வீட்டிற்கு சென்றுவிட்டார். பாண்டி தனது அக்கா வீட்டுக்கும் வந்து மகளை சீரழிக்க முயன்றுள்ளார்.
 பெற்ற மகளையே கற்பழிக்க முயன்ற பாண்டியை அவரது அக்காவும், பொதுமக்களும் தடுத்து நிறுத்தினர். மேலும் இது குறித்து போலீசிலும் புகார் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல