கறுப்பு கொடி காட்டிய
நெருப்பு தமிழர் எங்கே?....
நாட்டின் தலைவர் மகிந்தர் யாழ் சென்று திரும்பினார்.
கூடவே அவரது கூட்டமும் போனது.
பசில் சகோதரயா, கோட்டாபே சகோதரயா இருவரும்
அண்ணலுக்கு பக்க துணை போனார்கள்.
முன்பெல்லாம் பாருங்கோ அரச அமைச்சர்கள் யாழ் வந்தால்
கறுப்புக் கொடி காட்டி ஆக்கிரோஷம் கிளப்புவார்கள்.
ஆனால், நாட்டின் அதிகார தலைவரே தமிழர்களின்
தலைவாசல் பூமிக்கு சென்று வந்திருக்கிறார்.
அவருக்கு யாழகத்து மாவிலை தோரணம் தொங்க விட்டு
ஆராத்தி எடுத்தார்கள் யாழக தமிழிச்சிகள்.
போகும் இடமெல்லாம் மகிந்தருக்கு பொங்கு தமிழ் வரவேற்பு.
எங்கும் மகிந்தருக்கு மலர் மாலை கௌரவிப்பு.
அன்று போல் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க
ஆருமில்லை அங்கு.
நாட்டில் ஐனநாயகம் இல்லை என்று இதற்கு யாரும்
பதில் சொல்ல முடியுமோ?....
எங்களது வெற்றறிக்கைப் புயல் வீரர் கூட்டமைப்பார்
அரசுக்கு எதிராக விட்டிராத அறிக்ககைளும் இல்லை.
கோதாரி விழுந்த தமிழ் தேசியத்தின் பேர் சொல்லி
வியாபாராம் நடத்தும் ஊடகங்கள் வெளியிடாத
எதிர்ப்பு செய்திகளும் இல்லை பாருங்கோ...
இப்படி இருக்க,,,. அதிகார மகிந்தர் எதிர்ப்பேதும் இன்றி
யாழ் சென்று வெற்றியோடு திரும்பிய இரகசியம்
என்னவென்று தெரியுமோ?....
ஏன்னதான் அறிக்கை விட்டாலும், நாடாளுமன்றத்தில்
நெருப்பு தீக்கிளம்ப வீராவேச உரை நடத்தினாலும்,~
பின் கதவால் சென்று அவர்களே அதிகார மகிந்தரிடம்
சொந்த சலுகை பெற்று வரும் பழக்க தோஷம்.
கறுப்பு கொடி மகிந்தருக்கு காட்டி விட்டால்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சொந்த சலுகைகளுக்கு
மகிந்தர் பச்சை கொடி காட்ட மாட்டார் என்ற
காரணம் தான் பாருங்கோ.....
மொத்தத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இங்கு
இணக்க அரசியல்தான் பாருங்கோ.
இணக்கம் காண்பது தன்னலமேயன்றி, தமிழரின்
பிணக்கு தீர்க்கவல்ல உணர்,......
இப்படிக்கு
மதகடிப்பண்டிதன்.
தாய்நாடு ஆசிரியர் குழுவைச் சேர்ந்த மதவடிப் பண்டிதனால் எழுதப்பட்ட அதிரடிப் பதிவு இது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக