கைதிகள் மனித மலத்தை உண்ண வேண்டும் என்றுகூட தமிழீழ விடுதலைப் புலிகள் நிர்ப்பந்தித்து இருக்கின்றனர்.
புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் தான் பெற்றுக் கொண்ட அனுபவங்களை தொடராக எழுதி வருகின்றார்.
பயங்கரவாதிகள் ஒருபோதும் உண்மை பேசுவதில்லை என்கிற தலைப்பில் இவரது 83 ஆவது தொடர் அமைந்து உள்ளது.
இதில் துணுக்காயில் உள்ள அரச களஞ்சியம் ஒன்றில் 1990 களில் புலிகள் சுமார் 4000 கைதிகளை அடைத்து வைத்தனர் என்றும் மிகக் கொடூரமான சித்திரவதைகளுக்கு பெயர் போன இம்முகாம் மல்லி என்கிற புலனாய்வாளரின் பொறுப்பில் இருந்தது என்றும் இங்கு மனித மலத்தை சாப்பிடும்படி கைதிகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்றும் தோழர் சுப்பிரமணியம் எழுதி உள்ளார்.
இதுதான் இவரது 83 ஆவது தொடர்:
“ இன்று உலகின் மிகச் சக்தி வாய்ந்த நாடுகள் சிலவும், பிரபல்யமான சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், மிகச் சிறிய நாடான இலங்கையில் மனித உரிமைகள் மிக மோசமாக மீறப்பட்டு விட்டதாகவும், தொடர்ந்து மீறப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தினசரி ஒப்பாரி வைத்த வண்ணம் உள்ளன.
இந்த நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை, தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை, ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாத்தல், பல பத்தாயிரம் மைல்களுக்கப்பால் தமது நாட்டின் நலன்களைப் பாதுகாத்தல் (!) என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, கடந்த சில ஆண்டுகளாகப் பல நாடுகளில் இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து வந்துள்ளனர். தமக்கு விரும்பாத நாடுகளுக்கு எதிராக இந்த நாடுகள்; விதித்த பொருளாதாரத் தடைகளால், பல்லாயிரக்கணக்கான பச்சிளம் குழந்தைகளும், வயோதிபர்களும், ஏழை எளிய மக்களும் பல இலட்சக்கணக்கில் செத்து மடிந்துள்ளனர். அப்படியும் திருப்திப்படாத அவர்கள், அந்த நாடுகளில் பலவந்தமாக ஆட்சி மாற்றங்களையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்தக் கொடுமைகளைப் பற்றி இந்தப் பிரபலமான மனித உரிமை அமைப்புகள் வாய் திறப்பதில்லை. இவர்கள் வாய் திறந்து குற்றச்சாட்டுகளை அடுக்குவது, சீனா, கியூபா, வட கொரியா, வெனிசுவேலா, வியட்நாம், சிம்பாப்வே, ஈரான், சிரியா, பலஸ்தீனம், எரித்திரியா போன்ற நாடுகளை நோக்கித்தான் இருக்கும். இந்த நாடுகள் ஒன்றில் சோசலிச நாடுகளாக இருக்கும் அல்லது ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடுகளாக இருக்கும். தாம் விசுவாசிக்கும் நாடுகளின் மனித உரிமைகள் குறித்து எவ்விதமான கடுமையான தொனியும் இன்றித் தமது வருடாந்த அறிக்கைகளில் அந்த நாடுகளின் மனித உரிமை நிலவரங்கள் குறித்து பட்டும் படாமல் தொட்டுவிட்டு அப்பால் சென்று விடுவார்கள்.
அண்மையில் இன்னமும் மன்னராட்சி நடக்கும் சவூதி அரேபியாவில் இலங்கைச் சிறுமியான றிசானா நௌபீக்கின் தலை மனித நாகரீகமே வெட்கித் தலை குனியும் விதத்தில் வாளால் துண்டாடப்பட்டுக் கொலை செய்யப்பட்ட போது, இந்தப் பெரிய ‘ஜனநாயக’ நாடுகளும், அவர்களுக்குத் துதிபாடும் மனித உரிமை அமைப்புகளும் எவ்வித கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை.
கம்போடியாவில் சோசலிசப் புரட்சி என்ற பெயரில் மனிதப் படுகொலைகளை நடாத்திய பொல்பொட் குழுவினருக்கு எதிராக, பொல்பொட் குழு கம்யூனிஸ்ட்டுகள் என்பதற்காக நீதி விசாரணை கோரிய இந்தப் பெரிய நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும், இலங்கையில் புலிகள் திட்டமிட்ட முறையில் நடாத்திய பெரியளவிலான படுகொலைகளையோ, இன – மதச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளையோ பற்றிப் பெரிதாக எதுவும் பேசுவதில்லை. இறுதி யுத்தத்தின் போது, யுத்தத்தின் இடையில் சிக்கி உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களின் மரணங்களுக்கு ஒரு தலைப்பட்சமாக யுத்தத்தின் ஒரு தரப்பான இலங்கை அரசாங்கத்தை மட்டும் குற்றம் சாட்டுபவர்கள், துணுக்காயில் தாம் பிடித்து வைத்திருந்த மாற்று இயக்கப் போராளிகளையும், பொதுமக்களையும் புலிகள் ஆயிரக்கணக்கில் கொன்றழித்தது பற்றியோ, முஸ்லீம் மக்களை ஒருசில மணித்தியாலங்களில் வடபகுதியிலிருந்து வெளியேற்றியது பற்றியோ, முஸ்லீம்கள் பள்ளிவாயல்களில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, சுட்டுப் படுகொலை செய்யப்பட்டது குறித்தோ வாய் திறப்பதில்லை.
இந்திய அமைதிப்படை 1990இல் அப்போதைய ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவினால் இலங்கையை விட்டு வெளியேற்றப்பட்ட பின்னர், வடக்குக் கிழக்கு முழுவதையும் புலிகள் முழுமையாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பிரேமதாச அனுமதி அளித்திருந்தார். இந்தக் காலகட்டத்தில் புலிகள் கண்டபடி கடத்திய சுமார் 4,000 பேரைத் துணுக்காயில் அரசாங்கக் களஞ்சியம் ஒன்றில் அடைத்து வைத்துப் சித்திரவதை செய்து வந்தனர். இந்த முகாமுக்குச் சித்திரவதைகளில் மிகவும் பிரபல்யமிக்க புலிகளின் புலனாய்வு முக்கியஸ்தர்களில் ஒருவனான மல்லி என்பவன் பொறுப்பாக இருந்தான்.
இந்த முகாமில் இருந்த கைதிகள்தான் புலிகளின் வரலாற்றிலேயே மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்ட கைதிகள். இந்தக் கைதிகள் மீது புலிகளால் அடி உதை நிகழ்த்தப்பட்டது மாத்திரமின்றி, கைதிகளை மனித மலத்தை உண்ணும்படியும் புலிகள் நிர்ப்பந்திருக்கின்றனர். அங்கிருந்து விடுதலையான சுமார் ஒன்றரை டசின் கைதிகளில் ஜெகநாதன் என்பவர் என்னுடன், பிற்காலத்தில் நாவற்குழி - கோவிலாக்கண்டி முகாமில் சில காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் துணக்காய் முகாமில் நடந்த சித்திரவதைக் கதைகளைக் கூறியபோது, நான் பல இரவுகளில் நித்திரை கொள்ள முடியாமல் தவித்ததுண்டு.
அந்தக் காலகட்டத்தில், இந்தச் சித்திரவதை முகாம் குறித்து, இலங்கையின் சில மனித உரிமை அமைப்புகள் சர்வதேச ரீதியாகவும் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தன. இந்தப் பிரச்சாரங்களைத் தொடர்ந்து, மேற்கு நாடொன்றைத் தளமாகக் கொண்டியங்கும் பிரபலமான மனித உரிமை அமைப்பு ஒன்று இலங்கையில் உள்ள நிலைமைகளைக் கண்டறிவதற்காகத் தனது தூதுக் குழுவொன்றை அங்கு அனுப்பி வைத்தது. அந்ந தூதுக்குழு அரசாங்க அதிகாரிகளையும், பல்வேறு அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புகள், மத ஸ்தாபனங்கள் என்பனவற்றின் பிரதிநிதிகளையும் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டனர்.
இந்தக் காலகட்டத்தில் இலங்கைப் படைகளினதும், இந்திய அமைதிப்படையினரதும், புலிகள் அமைப்பினதும் மனித உரிமை மீறல்களை வெளி உலகுக்கு ஒழுங்காக அறிக்கையிட்டு வந்த பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமை அமைப்பு ஒன்று, வெளிநாட்டிலிருந்து வந்த இந்தத் தூதுக்குழுவைச் சந்தித்து, இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் குறித்துக் கலந்துரையாடியது.
அந்தச் சந்திப்பின் போது பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமை அமைப்பினர், புலிகளின் துணுக்காய் வதை முகாம் பற்றியும் குறிப்பிட்டு, அதுபற்றிப் புலிகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் போது கேள்வி எழுப்பும்படி அந்த வெளிநாட்டு மனித உரிமைப் பிரதிநிதிகளிடம் கேட்டுக் கொண்டனர். அதற்கு அந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகள் சொன்ன பதில் பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமை அமைப்பினருக்கு சற்று ஆச்சரியகரமாக இருந்தது.
புலிகளிடம் இந்தப் பிரச்சினையை எழுப்பினால், புலிகள் அப்படி ஒரு வதை முகாம் துணுக்காயில் இல்லை என்று சாதிக்க முனைவார்கள் என்பது மட்டுமில்லாமல், அப்படியொரு வதை முகாமைத் தாங்கள் வைத்திருப்பது வெளி உலகத்திற்குத் தெரிந்துவிட்டபடியால், அதை மறைப்பதற்கு அங்குள்ள கைதிகள் முழுப்பேரையும் தீர்த்துக்கட்டி விடுவார்கள் என்று வெளிநாட்டு மனித உரிமைப் பிரதிநிதிகள் அச்சம் வெளியிட்டுள்ளார்கள். அத்துடன் இலங்கை போன்ற வேறு சில நாடுகளில் செயற்பட்ட ஆயுதப் போராட்ட இயக்கங்களும் இவ்வாறான சித்திரவதை முகாம்களை வைத்திருப்பதாகவும், சில நாடுகளில் இதுபற்றிக் கேள்வி எழுப்பிய போது, அந்த ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தாம் பிடித்து வைத்திருந்த கைதிகளைத் தீர்த்துக்கட்டிய அனுபவங்கள் தமக்கு ஏற்பட்டதாகவும் வெளிநாட்டு மனித உரிமைப் பிரதிநிதிகள் கூறியிருக்கின்றனர்.
இந்த விடயங்களை அந்த பல்கலைக்கழக மனித உரிமை அமைப்பிலுள்ள ஒருவர் என்னிடம் பின்னர் தெரிவித்தார். வெளிநாட்டு மனித உரிமை அமைப்பின்; பிரதிநிதிகள் முன்வைத்த அந்தக் காரணங்கள் அன்றைய நிலையில் எமக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியது போன்றே தோன்றியது. ஆனால் இறுதியில் நடந்ததைப் பார்த்தால், அப்பிரதிநிதிகள் கூறியது போல, புலிகளிடம் துணுக்காய் வதை முகாம் குறித்து கேள்வி எழுப்பாமல் விட்டதற்காக, புலிகள் அந்தக் கைதிகளை உயிரோடு விட்டு வைக்கவில்லை. ஏறத்தாழ அனைவரையுமே கொன்று விட்டனர். எனவே பிரச்சினையை மூடி மறைப்பதன் மூலம், பயங்கரவாதிகள் தமது மனங்களை மாற்றி விடுவார்கள் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும்.
என்னுடைய கைது தொடர்பாகவும் இந்த மாதிரியான ஒரு பிரச்சினை எனக்கு ஏற்பட்டது. என்னைக் கைது செய்தது சம்பந்தமான செய்தி ஒன்று, அப்பொழுது பலாலி இராணுவ முகாமில் இருந்து இயங்கியதாகக் கருதப்பட்ட ‘மக்கள் குரல்’ வானொலியில் ஒலிபரப்பப்பட்டதாக வெளியில் இருந்து வந்த ஒருவர் மூலம் நான் அறிந்தேன். அத்துடன் நானும் புலிகளின் தலைவர் பிரபாகரனும் உரையாடுவது போன்ற நாடகம் ஒன்றும் அந்த வானொலியில் ஒலிபரப்பப்பட்டதாகவும், அந்த நாடகத்தின் இறுதியில் பிரபாகரன் பதில் சொல்ல முடியாதவாறு நான் அவரை இக்கட்டான நிலைக்குத் தள்ளுவதாகவும் முடிக்கப்பட்டதாகவும் கேள்விப்பட்டேன். இந்த நிகழ்ச்சிகளை அப்பொழுது ஈ.பி.டி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும், ‘தினமுரசு’ வார ஏட்டின் வெளியீட்டாளராகவும் இருந்து, பின்னர் படுகொலை செய்யப்பட்ட அற்புதன்தான் நடாத்தியதாகவும் அறிந்தேன்.
இதே நேரத்தில் என்னையும், என்னுடன் சேர்த்துப் புலிகளால் கைதுசெய்யப்பட்ட தோழர்கள், நண்பர்களையும் விடுவிக்கக் கோரி அப்போதைய ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவுக்கும், புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் உலகெங்கிலுமிருந்து வேண்டுகோள்களை அனுப்பி வைக்கும்படி, இலண்டனைத் தளமாகக் கொண்டு செயற்பட்ட மனித உரிமை அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டதாகவும், அதை பி.பி.சி தமிழோசை ஒலிபரப்புச் செய்ததாகவும், அத்துடன் அது கொழும்பிலிருந்து வெளியாகும் த ஐலன்ட் ஆங்கில நாளிதழில் பிரசுரிக்கப்பட்டதாவும், அந்த வெளியிலிருந்து புதிதாக வந்த நபர் தெரிவித்தார்.
இந்தத் தகவல்களைச் சொன்ன அவர், இவ்வாறெல்லாம் புலிகளை ஆத்திரமூட்டும் செய்திகள் மக்கள் குரல், பி.பி.சி தமிழோசை, ஐ லன்ட் பத்திரிகை என்பனவற்றில் வந்ததால், புலிகள் ஆத்திரமடைந்து என்னை ஒருபோதும் விடுதலை செய்ய எண்ண மாட்டார்கள் என அவர் எனக்கு ஒரு பய பீதியை உண்டாக்கினார்.
அந்த நேரத்தில் என்னுடன் அடிக்கடி உரையாடும் புலிகளின் புலனாய்வு முக்கியஸ்தர்களில் ஒருவனான அம்புறோஸ் என்பவனும் இந்த விடயங்கள் குறித்து என்னுடன் உரையாடினான். குறிப்பாக மக்கள் குரல் வானொலி ஒலிபரப்புப் பற்றிக் குறிப்பிட்ட அவன், அந்த ஒலிபரப்பை ஈ.பி.டி.பி கட்சியினர்தான் பின்னணியில் இருந்து இயக்குவதாகவும், என்னைப் பற்றிய செய்திகளை ஒலிபரப்பி, புலிகளுக்கு ஆத்திரமூட்டி, அதன் மூலம் புலிகள் மூலமாக எனக்கு ஏதாவது தீங்கு (மரணம்) விளைவிக்க வைத்து, அதைப் பிரச்சாரப்படுத்தி இலாபம் சம்பாதிப்பதே ஈ.பி.டி.பி கட்சியினரது நோக்கம் எனக் குறிப்பிட்ட அவன், ஆனால் இந்தத் தந்திரம் தங்களிடம் பலிக்காது என்றும் சொன்னான்.
பின்னர் தினமுரசு பத்திரிகையிலும் என்னைப் பற்றிய ஒரு செய்தி வந்ததாகவும்,, அதைப் பார்த்துத் தான் எனது பாதுகாப்புச் சம்பந்தமாகப் பயந்ததாகவும், யாழ்.பல்கலைக்கழகம் அமைந்துள்ள பரமேஸ்வராச் சந்தியில் பலசரக்குக் கடை வைத்திருக்கும் எனது நண்பர் ஒருவர் நான் விடுதலையாகி வந்த பின்னர் என்னிடம் சொன்னார்.
பிற்காலத்தில் நான் விடுதலையாகி கொழும்பு வந்து வாழத் தொடங்கியதும், எனது நீண்டகாலத் தோழரும், ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து, அண்மையில் காலமான தோழர் எஸ்.சிவதாசன் அவர்களிடம் இது பற்றிப் பிரஸ்தாபித்தேன். அதாவது என்னைப் பற்றிய விடயங்களைப் புலிகள் ஆத்திரமூட்டும் வகையில் வானொலி, பத்திரிகை என்பனவற்றில் வெளிக் கொணர்ந்தால், அது புலிகளால் எனது உயிருக்கு ஆபத்து விளைவிக்க வழி வகுக்கும் அல்லவா என அவரிடம் வினவினேன்.
அதற்கு அவர் சொன்ன பதில், வெளிநாட்டு மனித உரிமைப் பிரதிநிதிகள் சொன்ன காரணங்களுக்கு எதிர்மாறாக இருந்தது. அதாவது புலிகள் என் போன்றவர்களைக் கைது செய்தால், ஒரு போதும் விடுதலை செய்ய மாட்டார்கள் எனத் தாம் கருதியதாகவும், குறைந்த பட்சம் எனது கைது நடவடிக்கை சம்பந்தமாக வெளி உலகிற்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, தாம் அவ்வாறு செய்திகள் வெளியிட்டதாக அவர் விளக்கமளித்தார்.
பொதுவாக பயங்கரவாத இயக்கங்களும் சரி, உண்மையான விடுதலை இயக்கங்களும் சரி, தாம் பிடித்து வைத்திருக்கும் கைதிகள், சம்பந்தமாகவோ அல்லது தாம் நடாத்தும் சித்திரவதை முகாம்கள் சம்பந்தமாகவோ, உண்மை பேசுவதில்லை. சில அரசுகள்கூட தாம் வைத்திருக்கும் கைதிகள் சம்பந்தமாக விபரங்களை வெளியிடுவதில்லை. இது எல்லோரும் அறிந்த உண்மைதான்.
இங்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம். நான் 2004 டிசம்பரில் நியூயோர்க் நகரில் இருந்த போது, சர்வதேச மன்னிப்புச் சபையின் முன்னாள் தலைவரான இயன் மார்டின் அவர்களைச் சந்திக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. நான் புலிகளின் கைதியாக இருந்த விபரத்தைக் கேட்டறிந்த அவர், புலிகளின் சித்திரவதை முகாம்கள் சம்பந்தமாகவும் கேட்டறிந்து கொண்டார். இறுதியாக அவர் கருத்துத் தெரிவிக்கையில், தாம் இதுபற்றிப் புலிகளுடன் கலந்துரையாடியதாகவும், ஆனால் புலிகள் அப்படியான சித்திரவதை முகாம்கள் எதுவும் தங்களிடம் இல்லை எனக் குறிப்பிட்டதாகவும் கூறினார்.
இதுபோலவே நான் புலிகளால் விடுதலை செய்யப்பட்ட பின்னர் கொழும்பில் வந்து தங்கியிருந்த காலத்தில், செம்மணி மனிதப் படுகொலைப் புதைகுழிகள் சம்பந்தமாக ஆராய வந்து சர்வதேச மன்னிப்புச் சபையைச் சேர்ந்த ஒரு பெண்மணியும், ஹொங்கொங்கைத் தளமாகக் கொண்டியங்கும் ஆசிய மனித உரிமைகள் ஸ்தாபனத்தின் பிரதிநிதியும், என்னைத் தனித்தனியாக இரகசியமாகச் சந்தித்து உரையாடிய போது, அவர்களும் இம்மாதிரியான ஒரு கருத்தையே தெரிவித்தனர்.
அதாவது, பயங்கரவாதிகள் தம்மை விடுதலைப் போராளிகள் என்றும், வேறு பலவிதமான பெயர்களிலும் அழைத்துக் கொண்டாலும், பயங்கரவாதிகள் தாம் செய்யும் மனித விரோதச் செயல்களை ஒருபோதும், ஏற்றுக் கொள்வதோ, வெளிப்படுத்துவதோ இல்லை.”

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக