சனி, 23 பிப்ரவரி, 2013

வெளிநாட்டவர்களுக்கு காணிகள் விற்பதற்கு அரசாங்கம் தடை

வெளிநாட்டவர்களுக்கு அரச மற்றும் தனியார் காணிகளை விற்பனை செய்வதைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக வரவு செலவுத்திட்டத்தின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல நேற்றுத் தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனை அறிவித்தார். நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளால் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்திருக்கும் சந்தர்ப்பத்தில். காணிகள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையிலேயே இத்தீர்மானத்தை அரசாங்கம் எடுத்திருப்பதாகக் கூறினார்.

இதற்கமைய வெளிநாட்டவர்கள் இலங்கையில் அரச அல்லது தனியார் காணிகளைக் கொள்வனவு செய்ய முடியாது. எனினும். பொருளாதார அபிவிருத்திக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் நீண்டகாலத்துக்கு காணிகளை குத்தகைக்கு எடுக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார். எனினும் உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் இராஜதந்திர கட்டடங்களுக்கான காணிகளுக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தியடைய ஆரம்பித்திருக்கும் நிலையில் தென்பகுதியில் பல காணிகள் மற்றும் வீடுகள் வெளிநாட்டவர்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட காணிகளோ, வீடுகளோ எவ்வித பயன்பாடுமின்றி மூடியே காணப்படுகின்றது. இதனால் அரசாங்கத்துக்கு வருமானம் கிடைப்பதில்லை. இவ்வாறான செயற்பாடுகளைத் தடுக்கும் வகையிலேயே வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்பனை செய்வதை தடுக்க அரசாங்கம் தீர்மானித்ததாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேலும் குறிப்பிட்டார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல