வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

உதைபந்தாட்ட சூதாட்ட சூத்திரதாரியாக சிங்கப்பூர் தமிழர்

நான்கு கண்டங்களில் நடந்த உதைபந்தாட்ட போட்டிகளில் நடைபெற்ற சூதாட்டத்திற்கு சூத்திர தாரியாக சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழர் செயற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலக கிண்ண, ஐரோப்பிய கிண்ண உதைபந்தாட்ட தகுதிச் சுற்று மற்றும் கழக போட்டிகளில் சூதாட்டம் இடம்பெற்றமை தெரியவந்ததையடுத்து, மேற்படி சூதாட்டத்திற்கு சூத்திரதாரியாக சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழரான வில்சன்ராஜ் பெருமாள் என்ற 47 வயதான பொறியியலாளர் ஒருவர் செயற்பட்டமை தெரியவந்துள்ளது.

மேற்படி சூத்திரதாரி பெருமாள் தலைமையிலான குழு ஐரோப்பிய சூதாட்ட தரகர்களுடன் தொடர்பு கொண்டு மிகப்பெரிய மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டுள்ளது. அவரது இணையத்தளம் மற்றும் ஈ-மெயில் ஆய்வு மூலம் சூதாட்டம் பற்றிய பல்வேறு தகவல் கிடைத்துள்ளன. இதன் மூலம் அவர் கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்ததும் தெரியவந்துள்ளது.

உதைபந்தாட்ட சூதாட்டம் தொடர்பாக இதுவரை 50 பேர் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விறுவிறுப்பாக நடைபெறும் உதைபந்தாட்டப் போட்டிக்கு கோடிக் கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் உதைபந்தாட்ட போட்டிகளில் நடைபெற்ற சூதாட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, நான்கு கண்டங்களில் இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டிகளில் 680 ஆட்டத்தில் மேட்ச் பிக்சிங் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல