ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

நான் Facebook ..!

உண்மைதான்
நான் facebook பேசுகிறேன்
என்னை செல்லமாய் FB என்று அழைப்பார்கள்
ஆண்டவன் ஒரு நோக்கத்துக்காக
இந்த உலகை படைத்தானாம் ஆனால்
அவன் ஆசை போல் இந்த உலகம் அமையவில்லையாம் என்பார்கள்.
நானும் அப்படியே ஒரு நோக்கதுக்காய் உருவாக்கப்பட்டேன்
அனால் என் பாதை சரிதானா? என கேள்வி கேட்க்கிறேன் இப்போது

நான் இணையப்புரட்சியில் ஒரு ஜான்பவான் என்பதில் எனக்கு பெருமைதான்.
உங்கள் கணணிகளுக்குள்ளும்
கையில் தவழும் கைபேசிக்குள்ளும் உலகை சுருக்கி வைத்திருக்கின்றேன் என்பது என் சாதனைதான்.
ஆரோக்கியமான விவாதங்களுக்கு களம் கொடுத்திருக்கும் என் ஊடக சுதந்திரம் மெச்சப்பட வேண்டியதுதான் .
கண் விழிக்கும் போதும் தலையை தலையணை அணைக்கும் போதும் நான் தேடப்படுகிறேன் என்பது என் பாக்கியம்தான்.(யாரந்த பாக்கியம்?..lol)

எனக்கு தொலைவுகள் இல்லை
ஒரு மொழி என்றில்லை
ஒரு இனம் என்றில்லை
ஒரு மதம் என்றில்லை
மொத்தத்தில் இருக்கு ஆனால் இல்லை என்பதை போன்றவன்.
உலகமயமாக்கம் பிரசவித்து வளத்து விட்ட குழந்தை நான் அதனால்தான் என்னவோ என் வளர்சி கட்டுப்படுத்த முடியாதளவு செல்கிறது .

நான் முதலில் நண்பர்கள் கூடி உலாவவே வழி கொடுத்தேன்
இன்று நண்பர் என்கிற பெயரே கேள்விக்குரியாக்கப்பட்டிருக்கிறது !
என் சில மாணவர்களால் .
வெறும் request கொடுத்த கணமே அவன்/அவள் உன் நண்பர் அந்தஸ்துக்கு உயர்ந்து விடுகிறானா/விடுகிறாளா
அப்படியென்றால் நீ தினம் பார்க்கும் அல்லது தினம் பார்த்த உன் பேச்சையும் அசைவுகளையும் அணுவணுவாய் புரிந்து வைத்திருக்கும் உன் நண்பனும் நண்பியும் என்னவாகிப்போவார்கள் ?

நீ முகம் பார்த்திடாத ,நேராய் பழகிடாத நண்பர்களுக்கு சில மணி நேர chating இல் நண்பர் அந்தஸ்து கொடுத்து விடாதே. உண்மை நட்பின் அர்த்தம் பொய்யாக்கப்பட்டுவிடும் .
நான் கூறுவது என் மூலம் உன்னுடன் உலாவுவது உன்னை /நீ அறிந்த நண்பர்கள் விட்டு மற்றவர்கள் எல்லாம் ஒவ்வொரு பெயர் வைத்த ஊடகங்கள் மாத்திரமே புரிந்துகொள்.
இது சில பெயர் வைத்த ஊடகங்களுக்கு அறியாமையிலும் , ஆர்வக்கோளாரிலும் நண்பரென்று பெயர் வைத்து போதையில் அலையும் சிலர் புரிந்து திருந்தவே சொல்ல வேண்டியதை போயிற்று .

உங்கள் நல்ல status பார்த்து வாழ்த்தியிருக்கிறேன் .
சில நல்ல புகைப்படங்களும் வீடியோக்களும் பார்த்து மனதுக்குள் like பண்ணியிருக்கிறேன் .
பல நல்ல விடயங்களை உலகம் பூராகவும் share பண்ணி கூட்டம் சேர்த்தும் உதவிகள் பண்ணியும் சில நன்மைகள் செய்திருக்கிறன் என்பதில் திருப்தியடைந்திருக்கிறேன் .
அதே போல் உங்கள் மொக்கை status களும் சகிக்க முடியாத புகைப்படங்களும் ,சில வக்கிர மனிதர்களின் நடத்தைகளும் என்னை பாதிக்காமலில்லை . உங்கள் அந்தரங்களை எல்லாம் கொட்டிவைக்க நான் ஒன்றும் உங்கள் அந்தரங்க செயலாளரோ , படுக்கையறையோ இல்லை என்பதை எப்படி புரியவைப்பதென்று தவிக்கிறேன் .

நான் நல்லவனா?கெட்டவனா? என கேட்க வைத்துவிட்டீர்கள்
சில நாடுகள் என்னை தடை செய்யும் பொது எனக்கு சுறுக்கென்று கோபம் வந்தது என் சுதந்திரத்தில் தலையிடுகிறார்கள் என்று.
இப்போது எனைச்சாட்டி நீதிமன்றங்களிலும் , குடும்பங்களினுள்ளும் பிரச்சனைகள் தினம் தினம் தேக்கப்படும் செய்திகளை கேட்கும் போதுதான்
என் சுதந்திரத்துக்கான வரையறையை தேடுகின்றேன் .

சில இளையோரின் கன்னித்தன்மை என்னால் மனதளவில் கேள்விக்குரியாக்கப்படுகிறதோ என்ற கவலை இருக்கிறது எனக்கு.
பேசினால் என்ன கற்ப்பு கேட்டுவிட போகிறதா ? உனக்கேன் இந்த கவலை என்கிறீர்களா .?
நான் இந்திய , இலங்கை கலாச்சாரத்தையும் , இஸ்லாமிய கலாச்சாரத்தையும் மனதில் வைத்து யோசியுங்கள் என்கிறேன் .
மேலைத்தேய கலாசாரம் அதுவாகவே இருக்கிறது அவற்றின் பாரம்பரியத்தில் கைவைத்ததாக பெரிய குற்றச்சாட்டும் தடைகளும் என் மீது வரவில்லையே .

உன்னை குற்றம் சாட்டவில்லை நீ ஆணிடமோ ,பெண்ணிடமோ பேசு யாரென்று தெரிந்து உனக்கான வரையறையை வகுத்துக்கொள்.
நீயும் காப்பாற்றப்படுவாய் , உன் நேரமும் காப்பாற்றப்படும், உன் கலாச்சாரமும் , உறவுகளும் சுத்தமாக இருக்கும் .

இன்று என் கவலைகள் உனக்கு உளறலாகவோ வெறும் ..lool.. ஆகவோ இருக்கும் .
இன்றுவரை நீ கேள்வியுறும் என் பெயரடிபடும் பிரச்சனைகள் அன்று இணையத்தில் படித்ததாய் இருந்திருக்கும் ,நேற்று உன் நண்பரின் வாசலேறியிருக்கும், அதே எனைச்சாட்டி பிரச்சனை ஒன்று நாளை உன் கதவுகளை தட்டி நிட்கலாம் அப்போது புரிந்து கொள்வாய் இது வெறும் ..லொள்.. அல்ல
முன்னெச்சரிக்கை என்று .!!

இரா.வி.ராஜ்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல