வியாழன், 11 ஏப்ரல், 2013

தலை ஒட்டிப் பிறந்த சகோதரிகளைப் பிரிக்கக் கூடாது...

பீகார் மாநிலம் பாட்ணாவைச் சேர்ந்த ஏழை டீக்கடைக்காரரின் மகள்கள் சாபஹா, பாரா. இரட்டை சகோதரிகளான இவர்கள் பிறக்கும் போதே தலை ஒட்டிப் பிறந்தனர். தற்போது அவர்களுக்கு 17 வயதாகிறது. தலை ஒட்டிய நிலையில் இருப்பதால் இருவர்களுக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. இருவரும் பருவ வயதை எட்டிவிட்டனர். அவர்களது நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு பார்க்க அவஸ்தைபடுவது போல் இருந்தாலும் இரட்டை சகோதரிகளுக்கு பழகிப்போய்விட்டது.

பெற்றோரும் சிரமமாக எடுத்துக் கொள்ள வில்லை. தலை ஒட்டிய நிலையில் அந்த சகோதரிகளை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பது மருத்துவ ரீதியாக கடும் சவாலாக இருந்து வருகிறது. அவ்வாறு அறுவை சிகிச்சை செய்து பிரிக்கப்பட்டால் அவர்களில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அறுவை சிகிச்சைக்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இரட்டை சகோதரிகளுக்கு மருத்துவ ரீதியாக உதவ உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. கோர்ட்டிலும் பெற்றோர் அறுவை சிகிச்சைக்கு மறுப்பு தெரிவித்தனர். எனவே அறுவை சிகிச்சை மூலம் இரட்டை சகோதரிகளை பிரிக்க உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்து விட்டது.

இரட்டை சகோதரிகளை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பதில் சிரமம் இருப்பதாலும், அவர்களது பெற்றோர் அதனை விரும்பாததாலும் இதில் கோர்ட்டில் உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ளது. அதே சமயம் இரட்டை சகோதரிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், இரட்டை சகோதரிகளின் உடல் நிலையை மருத்துவ குழு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

இரட்டை சகோதரிகளை பிரிக்க ஏற்கனவே பல முறை மருத்துவ ரீதியாக முயற்சி நடந்தது. பரிசோதனைகளும் நடந்தன. ஆனால் அவர்கள் பிரிக்கப்பட்டால் ஒருவர் மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அறுவை சிகிச்சைக்கு பெற்றோர் மறுத்து விட்டனர்.



Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல