ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

“விடுதலைப் புலிகளுக்கு புதிய தலைவர் இல்லை! அம்மானே தலைவர்” ஆதித்தன் மாஸ்டர் ஆவேசம்!

விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் ஒருவரை இலங்கை அரசு வெளிநாட்டில் அடையாளம் கண்டுள்ளது என சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளதாக தமிழ் ஊடகங்கள் தெரிவித்திருப்பது, “அடிவருடி விஷமிகளில் ஏகாதிபத்திய சதிச்செயல்” என வர்ணித்துள்ளது, வெளிநாட்டு விடுதலைப் புலிகள் நெடியவன் படையணி.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நெடியவன் படையணியின் அதிகாரபூர்வ பேச்சாளர் ஆதித்தன் மாஸ்டர், “ஏகாதிபத்திய இலங்கை அரசின் எலும்புத் துண்டுகளுக்காக ஏங்கி நிற்கும் அடிவருடி விஷமிகள், புதிதாக ஒரு தலைவர் உருவாகியுள்ளார் என்று பரப்புரை செய்கின்றனர்.

தேசியத் தலைவரால் அடையாளம் காட்டப்பட்ட ஒரே தலைவர், நெடியவன் அம்மான் மட்டுமே. வேறு தலைவர் உள்ளார் என்ற பேச்சுக்கே இடமில்லை.

தேசியத்தலைவர் அவர்கள் தற்போது மௌனித்து உள்ளதால், அவரின் கட்டளைப்படி நெடியவன் அம்மான் அவர்கள் தமிழ் மக்களை வழிநடத்துகிறார். தேசியத் தலைவர் மௌனம் கலைக்கும்போது, அம்மான் மௌனிப்பார்” என்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.


viruvirupu

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல