திங்கள், 8 ஏப்ரல், 2013

கோடிக்கணக்கில் பண மோசடி... சித்தி மீது நடிகை அஞ்சலி பகிரங்க புகார்.

என்னுடைய கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்துவிட்டார் என் சித்தி. எனவே அவரைப் பிரிந்துவிட்டேன், என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார் நடிகை அஞ்சலி.

கற்றது தமிழ்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, அங்காடித் தெருவில் சிறந்த நடிகையாக பெயர் பெற்றவர் அஞ்சலி. ஆந்திராதான் பூர்வீகம்.
பொதுவாக இவர் எங்கு போனாலும் உடன் ஒரு பெண்மணியையும் அழைத்துவருவார். இவரை அஞ்சலியின் தாய் என்றே பலரும் நினைத்து வந்தனர். ஆனால் அது உண்மையல்ல.

அஞ்சலியுடன் அவரது சித்திதான் இத்தனை நாள் வந்து கொண்டிருந்தார். அவர் அம்மா வருவதில்லையாம். பண விவரங்களையும் சித்திதான் கவனித்து வந்தாராம்.

சித்தியுடன் பிரிவு

ஆனால் அஞ்சலியின் பணத்தை பெருமளவு சுருட்டிவிட்டாராம் இந்த சித்தி. இதனால் கோபம் கொண்ட அஞ்சலி, இப்போது அவரை விட்டுப் பிரிந்துவிட்டார்.
இத்தனை நாள் சென்னை கோடம்பாக்கத்தில் ஹவுசிங் போர்டு வீட்டில் வசித்த அஞ்சலி, சமீபத்தில்தான் ஆலப்பாக்கத்தில் புதிதாக வீடு கட்டினார். ஆனால் இப்போது அதையும் விட்டுவிட்டு ஹைதராபாதுக்கே போய்விட்டாராம்.


என் அம்மா அல்ல

இதுகுறித்து அஞ்சலியிடம் கேட்டபோது, "நீங்கள் என்னுடைய அம்மா என்று நினைக்கிறவர் என்னுடைய அம்மா கிடையாது. அவர் என்னுடைய சித்திதான். மேலும், சென்னையில் என்னுடன் இருக்கும் குடும்பமே என்னுடைய சொந்த குடும்பம் கிடையாது.

பண மோசடி

அவர்களுக்காக நான் நிறைய செய்திருக்கிறேன். என்றாலும் எனக்குத் தெரியாமலேயே பெரிய மோசடி வேலைகளை செய்து வருகிறார். கோடிக்கணக்கில் என்னுடைய படத்தை கையாடல் செய்துவிட்டார்.
இவருக்கு உறுதுணையாக இருந்து வருபவர் இயக்குனர் களஞ்சியம். இருவரும் என்னை ஒரு மெசின் போலவே நடத்துகிறார்கள். என்னை தாங்கமுடியாத அளவுக்கு கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்.


கொடுமை

எனது சொந்த அண்ணன், அக்காவைக்கூட பார்க்கவோ, பேசவோ அனுமதிப்பதில்லை. இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. நான் மேஜர். என்னுடைய சொந்தக் காலில் நிற்க முடிவு எடுத்துவிட்டேன். இப்போது ஹைதராபாத்தில் குடியேறியிருக்கிறேன். தற்போது எனக்கு யாரும் துணையில்லை. என்னுடன் தொடர்புடையவர்களின் போன் நம்பர்களைக்கூட அவர்கள்தான் வைத்திருக்கிறார்கள். என்னைப் பற்றி அவதூறு பரப்பவும் தயாராக இருக்கிறார்கள்.


இயக்குநர் களஞ்சியம்

என் உடலில் சிறு கீறல் ஏற்பட்டாலும் அதற்கு என்னுடைய சித்தியும், இயக்குனர் களஞ்சியமும்தான் முழுப் பொறுப்பு. நான் சினிமாவில் இதுவரை சம்பாதித்த பணம் அனைத்தையும் அவர்கள் எடுத்துக் கொண்டுவிட்டார்கள். எனக்கென்று இப்போது எதுவுமில்லை. இனிமேல்தான் என்னுடைய தேவைக்கு பணம் சேர்க்க வேண்டும். எனது உண்மை நிலையை விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து வெளிப்படுத்துவேன்," என்றார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல