சனி, 6 ஏப்ரல், 2013

குரங்குகளால் வளர்க்கப் பட்ட பெண்

இங்கிலாந்தில் உள்ள பிராட்பேர்டு நகரை சேர்ந்தவர் மரீனா சேப்மேன் (63). இவர் குழந்தையாக இருந்தபோது சிலர் இவரை கடத்திச் சென்று கொலம்பியாவில் உள்ள ஒரு அடர்ந்த காட்டில் அனாதையாக விட்டு சென்றனர்.

அங்கு அவரை குரங்கு கூட்டம் தத்தெடுத்து தன் குழந்தை போன்று பாலூட்டி சீராட்டி வளர்த்தது. எனவே, அவர் குரங்கு போன்றே 2 கைகள் மற்றும், 2 கால்களை தரையில் ஊன்றியபடியே நடந்து வளர்ந்தார்

இதனால் அவரது கை, கால்களில் தோல்கள் பாதம் போன்று பரந்து விரிந்தது. மேலும், குரங்குகள் போன்று இவரும் மரத்துக்கு மரம் தாவியபடி வாழ்ந்தார். உடம்பில் துணி எதுவும் இல்லாமல் நிர்வாணமாகவே குரங்குகளுடன் சுற்றித் திரிந்தார்

இதற்கிடையே ஒரு சில்லறை வியாபாரி ஒருவர் இவரை காட்டில் கண்டுபிடித்து ஊருக்குள் அழைத்து வந்தார். அப்போது அவருக்கு பேச தெரியாது. பின்னர் ஒரு வீட்டில் பெண்ணிடம் வேலைக்கு சேர்த்துவிட்டார். அங்குதான் மரீனா பேசவும், எழுத படிக்கவும் கற்றுக் கொண்டார்.

தற்போது, தனது சுய சரிதையை புத்தகமாக எழுதியுள்ளார். அதற்கு, ‘தி கேர்ள் வித் நோ நேம்’ என பெயரிட்டுள்ளார். அடர்ந்த காட்டில் நடந்த தனது வாழ்க்கை போராட்டம் குறித்தும், அதில் இருந்து மீண்டு மனித வாழ்க்கைக்கு திரும்பியதையும் திரில்லுடன் எழுதியுள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல