வியாழன், 2 மே, 2013

சிறுமிகளைப் பலாத்காரம் செய்ததாக 93 வயது முதியவர் மீது குற்றச்சாட்டு

93 வயது க்ரோவ், சக கைதிகளின் உதவியால் சக்கர நாற்காலியில் உட்கார வைக்கப்படுகிறார்.

அந்த வயதான முதியவருக்கு வயது 93. அவர் மீது பாலியல் பலாத்காரம் குற்றம் சாட்டப் பட்டுள்ளது. ஆஸ்திரேலியரான கார்ல் ஜோசப் க்ராவ்ஸ், தாய்லாந்தில் வசித்து வருகிறார். கடந்த 2010ம் ஆண்டில், ஏழு முதல் 15 வயதுடைய நான்குச் சகோதரிகளைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக சியாங் மாய் மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தில், இவர் திங்களன்று முன்னிலைப் படுத்தப்பட்டார்.

மற்ற கைதிகள், க்ராவ்சை கைதிகளுக்கானப் பேருந்தில் இருந்து தூக்கி இறக்கி சக்கர நாற்காலியில் அமர வைத்து நீதிமன்ற வளாகத்துக்கு அழைத் துச் சென்றதாக டெய்லி மெய்ல் அறிக்கைக் குறிப்பிட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டில் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக கைது செய்யப்பட்ட க்ராவ்ஸ், பிணையில் வெளியில் வந்தவர், கடந்த ஆண்டு மியன்மார் நாட்டுக்குத் தப்பியோட முயன்றார். ஆனால் அவருக்கு முறையான செல்லுபடியாகக்கூடிய விசா இல்லாத காரணத்தால் அவர் தாய்லாந்திற்கே திருப்பி அனுப்பப் பட்டார்.

க்ராவ்சின் உடல்நிலை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால் அவர் மீதான பாலியல் பலாத்கார வழக்கை கைவிடும்படி இவரது வழக்கறிஞர்கள் வாதிட்டு வருகின்றனர். கடந்த மாதம், சிட்னி மார்னிங் டெலிகிராப்புக்கு அளித்த பேட்டியில், நான் இறக்கப் போகிறேன். நான் எந்தக் குற்றமும் புரியவில்லை. என்று கூறினார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல