சனி, 29 ஜூன், 2013

இவர் தான் கேணல் நகுலன்!!!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை காட்டில் மறைந்து வாழ்வதாக கூறிவந்த நகுலனுக்கு திருமணம் நடக்கிறது என்ற செய்தியை வன்னிமீடியா இணையம் வெளியிட்டது. நீர்வேலியில் நடைபெற்ற இத்திருமண விழாவில் பலர் கலந்துகொண்ட போதிலும், புகைப்படம் எடுக்க அங்கே தடைவிதிக்கப்பட்டிருந்தது.

சிவில் உடையில் நின்ற பல புலனாய்வுப் பிரிவினர், புகைப்படங்கள் எடுக்கவேண்டாம் என்று பலரை அச்சுறுத்தினார்கள். இதன் காரணமாக அங்கே சென்ற வன்னிமீடியா நிருபரால் கூட புகைப்படத்தை எடுக்க முடியவில்லை. வெறுமனவே கல்யாண வீடு நடந்தது, அதில் தயா மாஸ்டர், பாடகர் சாந்தன் உட்பட பல முன் நாள் புலிகள் கலந்துகொண்டார்கள் என்ற செய்தியை மட்டுமே நாம் வெளியிட்டு இருந்தோம். ஆனால் யார் செய்த புண்ணியமோ தெரியவில்லை, முகம் காட்ட விரும்பாத நபர் ஒருவர் இதனை துல்லியமாக எடுத்து எமக்கு அனுப்பிவிட்டார்.

அவர் நிச்சயம் ஒரு தமிழ் உணர்வாளராகத் தான் இருக்கவேண்டும் !

படத்தைப் பாருங்கள்: இதுதான் நகுலனின் கலியாண வீட்டு போட்டோ !

2009 க்கு பிறகு, நானும் தளபதி ராமும் இணைந்து 100 போராளிகளை வைத்து மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்க போகிறோம். கிழக்கில் இருந்து அது வெடிக்கும் ! உணர்வுகள் எல்லாம் துடிக்கும் ! நிச்சயம் தனி நாடு கிடைக்கும், என்று T.ராஜேந்தர் போல வீர வசனம் பேசினார் கேணல் நகுலன். இதனை நம்பி லண்டனில் இருந்து நாம் அறிந்த வரையில் ஒரு நபர் மட்டும் சுமார் 3,000 பவுன்ஸை நகுலனுக்கு அனுப்பிவைத்தார்.

கனடா , லண்டன், பிரான்ஸ், ஜேர்மனி எல்லா நாடுகளிலும் இருந்து நகுலனுக்கும் ராமுக்கும் காசு அனுப்பப்பட்டது. இவர்கள் உண்மையானவர்கள் அல்ல ! இவர்கள் காட்டில் இருக்கவும் இல்லை.

இலங்கை புலனாய்வுத்துறையின் கூடாரத்தில் தான் இருக்கிறார்கள் என்று அன்றே நாம் எழுதி இருந்தோம். இருப்பினும் சிலர்..... ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது. ஒருவேளை அவர்கள் காட்டில் இருக்கலாம் என்று எல்லாம் அறிவுரை கூறி காதைக் கிழித்தார்கள். ஆனால் இவர்கள் இருவருக்கும் அனுப்பப்பட்ட பணம், சிங்கள புலனாய்வுத்துறைக்கும், நகுலனின் ஆடம்பர கலியாணவீட்டுச் செலவுக்குமே செலவழிக்கப்பட்டுள்ளது. சிங்களம் நன்கு திட்டமிட்டு செயல்படுகிறது. ஆனால் அவை நீண்ட காலம் நிலைப்பது இல்லை.

என்றாவது ஒரு நாள் வெளியே வந்து தானே தீரும். ஓடு மீன் ஓட, ஒதுங்கும் மீன் ஒதுங்க காத்திருக்குமாம் கொக்கு என்பார்கள். அதாவது எல்லா மீன்களும் ஓடினாலும், தனக்கு என்று ஒரு மீன் கிடைக்கும் வரை பொறுமையோடு காத்திருக்குமாம் கொக்கு. அதுபோல இவர்கள் அனைவரும் மெல்ல மெல்ல ஒதுங்கிவிட, போராட்டம் மிக்க அமைப்பு ஒன்று , அதிலும் நம்பிக்கைக்குரிய அமைப்பு ஒன்று உருவாகும்வரை நாமும் காத்திருப்போம் !

வன்னிமீடியாக்காக:

வல்லிபுரத்தான்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல