செவ்வாய், 11 ஜூன், 2013

ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் நடத்தும் தேர்வின் ஹால் டிக்கெட்டில் ஒபாமா படம்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் நடத்தும் தேர்வு எழுத விண்ணப்பம் கூட அனுப்பாத ஒருவருக்கு வந்த தபாலில் வந்த ஹால் டிக்கெட்டைப் பார்த்ததும் ஒரு கணம் ஆடிப் போய் விட்டார். காரணம் அந்த ஹால் டிக்கெட்டில் அவரின் பெயர் முகவரி எல்லாம் சரியாக இருந்த நிலையில் அவரின் படத்துக்குப் பதில், அமெரிக்க அதிபர் ஒபாமா படம் இருந்ததுதான்.!

லாலுராம் மீனா (25). ராஜஸ்தான் மாநிலம் தௌஸாவைச் சேர்ந்த ராம்பஸ் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் மத்திய அரசின் அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வை கடந்த 1997ம் ஆண்டு எழுதி அதில் பாஸாகாத நிலையில் அரசுப் பணியே வேண்டாம் என்று ஒதுங்கி இப்போது தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில்தான் போன் வார கடசியில் அவருக்கு வந்த தபால் ஒன்றில் காணப்பட்ட அனுமதிச் சீட்டைக் கண்டு நொந்து போனாராம்..

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”நான் தபால் மூலம் இரு தினங்களுக்கு முன்னர் இதனைப் பெற்றேன். என்னுடைய பெயர், முகவரி எல்லாம் அனுமதி அட்டையில் சரியாக இருந்தது. ஆனால் புகைப்படம் மட்டும் ஒபாமாவின் படமாக இருந்தது. மேலும் எம்.ஏ.பி எட் பட்டதாரியான நான் எழுதும் தேர்வாக உதவிப் பொறியாளர் தகுதியில் இருந்தது. மேலும் பிறந்த தேதியும் தவறாக இருந்தது. எப்படி இந்தத் தவறு நிகழ்ந்துள்ளது என்று தெரியவில்லை. நான் இதற்காக அப்ளை பண்ணியிருந்தாலாவது கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்.ஆனால் நான் இப்போது அதற்கான வயது வரம்பைத் தாண்டி நிலையில் பெரிய குழப்படியான சூழலைக் கொடுத்து விட்டது இந்த கடிதம். ஆனா இது எங்கோ யாரோ அலட்சியமாக இருந்ததால் நிகழ்ந்த தவறுதான் எனபதை மட்டும் புரிந்து கொண்டேன்” என்றார்.

ஆந்தையார் ரிப்போர்ட்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல