ஞாயிறு, 9 ஜூன், 2013

அமிதாப் பச்சனோட நாய் செத்துப் போச்சாம்....!

பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனின் செல்லநாய் ஷனோக் உடல்நலக்குறைவால் மரணமடைந்தது.

70 வயதான அமிதாப் , ஷனோக் மீது உயிரையே வைத்திருந்தார். ரொம்பப் பிரியமாக இருப்பார். உலகிலேயே மிகவும் உயகரமான பிரன்ஹா டேன் வகை நாய் தான் இந்த ஷனோக்.

அமிதாப் மீது இந்த நாயும் ரொம்பப் பாசமாக இருந்தது. வீட்டில் இருந்தால் இருவரும் இணை பிரியாமல் கொஞ்சிக் குலாவியபடி இருப்பார்களாம்.

ஷனோக் என்றால் அருமையான தென்றல் காற்று என்று பொருளாம்.இதுகுறித்து விலாவாரியாக தனது பிளாக்கில் கூட அமிதாப் பச்சன் எழுதியுள்ளார். ஷனோக் என்ற பெயரை அமிதாப்பின் மகன் அபிஷேக்தான் வைத்தாராம்.

தனது செல்ல நாயின் மரணம் குறித்து அமிதாப் தனது பிளாக்கில், இனிமையான அந்த தென்றல் காற்று நின்று போய் விட்டது. கொஞ்ச நேரத்திற்கு முன்பு ஷனோக் இறந்து போய் விட்டதுஎன்று சோகத்துடன் கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.

சில நாட்களாகவே ஷனோக் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் கவலையுடன் இருந்தாராம் அமிதாப்.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல