தனது கணவரை கட்டி வைத்து அவரது பிறப்புறுப்பை வெட்டி குப்பை அகற்றும் இயந்திரத்தில் வீசிய பெண்ணொருவருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்க ஒரேஞ் பிராந்தியத்தில் வாழும் வியட்நாமை பிறப்பிடமாகக் கொண்ட கத்தரீன் இயயு (50 வயது), இரு வருடங்களுக்கு முன் தனது கணவருக்கு தூக்க மாத்திரைகளை வழங்கிய பின் மேற்படி கொடூர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அதற்காக அவர் 10 அங்குல நீளமான கத்தியைப் பயன்படுத்தியுள்ளார்.
கத்தரின் சிறுமியாக இருந்தபோது பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகி மனம் பாதிக்கப்பட்ட நிலையிலேயே மேற்படி செயலை மேற்கொண்டதாக அவரது சட்டத்தரணி வாதிட்டிருந்தார்.
இந்நிலையில் கத்தரீனின் கணவர் (60 வயது) விபரிக்கையில்,
தனது மனைவி மேற்கொண்ட காரியத்தால் தான் தனது முழு வாழ்வின் மகிழ்ச்சியையும் இழந்து விட்டதாக தெரி வித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக