திங்கள், 15 ஜூலை, 2013

உயிரை எடுக்கும் ஒற்றைத் தலைவலியா?

சிலருக்கு அடிக்கடி தலைவலி வரும். மிகச் சிலருக்கு இந்த தலைவலியானது ஒற்றைத் தலைவலியாக மாறி உயிரை எடுக்கும். இதனைப் போக்க எந்த மாதிரியான வாழ்வியல் பழக்கங்கள், மருந்துகள், சிகிச்சை முறைகள் தேவை என்பதை டொக்டர் சித்ரலேகாவிடம் கேட்கப்பட்டது.

சரியாக உணவு உண்ணாததும், ஒத்துக்கொள்ளாத சில உணவு வகை களை உண்பதும், அளவுக்கு அதிகமாக உண்பதும் ஒற்றைத் தலைவலிக்கு முக்கிய காரணங்களாகும். நல்ல ஆரோக்கியமான உணவை, வேளை தவறாமல் சாப்பிட வேண்டும். பால், காய்கறி வகைகள் நல்லது. இறைச்சி வகைகளைத் தவிர்ப்பது மிகவும் நல் லது.

தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் காலையில் எழுந்ததும் தலைவலிப்பதாகச் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. அதனால், நல்ல தூக்கம் வரச் செய்யும் வழிமுறைகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண் டும்.

உதாரணமாக, படுக்கப் போகும் முன் இளஞ்சூட்டில் பால் அருந்தலாம். உடற்பயிற்சிதான் உட லில் உள்ள வேதிப் பொருட்களை உற்பத்தி செய்யும் தன்மை கொண் டது. இதனால் மூளை நன்கு செயல் படத் தொடங்கும். முறையான தொடர் உடற்பயிற்சி இருந்தாலே ஒற்றைத் தலைவலி அண்டாது. ஆகையால், முடிந்த வரை தினமும் இடைவிடாது ஒரு முப்பது நிமிடம் அளவுக்கு உடற்பயிற்சிகளைச் செய்து வரலாம்.

கடுமையான வெயில், வானிலை மாற்றங் கள், காற்றோட்டமில்லாத புழுக்கமான சூழலில் வாழ்வது போன்ற இத்தகைய சுற்றுச்சூழல் நிலைகளாலும் சிலருக்குத் தலைவலி வரும்.

இப்படிப்பட்ட சூழல் உள்ளவர்கள் காற் றோட்டமுள்ள இடத்தில் தூங்குவதும், மலச் சிக்கல் வராமல் பார்த்துக்கொள்வதும் மிகவும் முக்கியம்.

மது அருந்துதல், புகை பிடித்தல், காபி அருந்துதல் ஆகியவை சிலருக்குத் தலைவ லியை ஏற்படுத்தும். இவை முற்றிலும் நிறுத்தப் பட வேண்டும். சிலருக்கு காபி சாப்பிட்டால் தலைவலி நிற்பது போலத் தெரியும். ஆனால் அது நிரந்தரமற்றதாகும்.

முக்கியமாக அதிகளவில் கவலைப்படுப வர்கள், அடிக்கடி சோர்வு அடைபவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி ஒற்றைத் தலைவலி வரும். இவற்றில் இருந்து விடுபட, மற்றவர்களுடன் நட்பாகப் பேசிப் பழக வேண்டும். மனம் விட்டுப் பேசி குறைகளைக் களைய வேண்டும்.

ஒற்றைத் தலைவலி எதனால் ஏற்பட்டது என்று அறிந்துகொண்டு அவற்றைத் தவிர்ப் பது மிகவும் நல்லது.

உதாரணமாக, ஒரு சிலபேருக்கு ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு உட்பட்டிருக்கும்போது தலைவலி ஏற்பட்டிருக்கும். அப்படியானவர் கள், அதுபோன்ற சூழலைத் தவிர்ப்பது நலம். சில பொருட்கள், வாசனைகள் 'அலர்ஜி'யாகி தலைவலியைக் கொடுத்திருக்கும். அவற் றைத் தவிர்த்து முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளலாம்.

அதிக அளவில் மருந்து எடுத்துக்கொள் வதும் சிலருக்கு தலைவலி வரக் காரணமாக இருக்கும். இதனால் மருத்துவரின் ஆலோச னைப்படி மட்டுமே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்" என்கிறார் டொக்டர் சித்ரலேகா.
டொக்டர் சித்ரலேகா

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல