சனி, 6 ஜூலை, 2013

அமெரிக்காவில் விலைமாதுகளுடன் அல் கொய்தா தலைவர் உல்லாசம்-

கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் அன்வர் அல் அவ்லாகி அமெரிக்காவில் இஸ்லாம் குறித்து போதனை செய்ய வந்த போது ஆயிரக்கணக்கான டாலர்களை விலை மாதுகளுக்காக செலவு செய்துள்ளார்.

அமெரிக்காவில் பிறந்த முஸ்லிம் மத தலைவர் அன்வர் அல் அவ்லாகி. அவர் அல் கொய்தா அமைப்பின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். அவர் இஸ்லாம் குறித்து போதிக்க அமெரிக்கா சென்றுள்ளார்.

அவர் 2001ம் ஆண்டின் இறுதியில் இருந்து 2002ம் ஆண்டு துவக்கம் முதல் எஃப்.பி.ஐ. இன் கண்காணிப்பில் இருந்தார். அப்போது அவர் ஆயிரக்கணக்கான டாலர்களை செலவு செய்து விலை மாதுகளுடன் உல்லாசகமாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

2002ம் ஆண்டு அவர் பென்டகனில் பேசவிருந்ததற்கு சற்று நேரத்திற்கு முன்பு கூட வாஷிங்டனில் உள்ள ஒரு ஹோட்டலில் 400 டாலர்கள் கொடுத்து ஒரு விலை மாதுவுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

வெர்ஜினியாவில் உள்ள மசூதியில் இமாமாக இருந்த அவர் வாஷிங்டனில் விலை மாதுகளுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

அவர் வெளிப்படையாக அல் கொய்தாவுடன் தன்னை இணைத்துக் கொண்டதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் விலைமாதுகளுடன் இருப்பது குறித்து பல்வேறு அரசு ஏஜென்சீக்கள் அவரிடம் விசாரணை நடத்தியிருந்தன.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல