புதன், 17 ஜூலை, 2013

காலணிக்குள் சார்ஜர்!!!(படங்கள், காணொளி இணைப்பு)

இன்று நம்மில் பலருக்கும் அவஸ்தை கொடுக்கும் போன் சார்ஜருக்கு பல சாதனங்கள் கண்டுபிடிக்கப் பட்டுதான் இருக்கிறது.

அந்த வரிசையில் தற்போது அமெரிக்காவில் கையடக்கத் தொலைபேசி சார்ஜருடன் கூடிய ஷு மற்றும் காலணிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் கிடைக்கும் மின்சாரம் மூலம் செல்போன் மற்றும் ஐ பாட் பேட்டரிகளில் சார்ஜ் போதுமானதாக இருக்கிறதாம்.

இந்த காலணியின் அடிப்பாகத்தில் பேட்டரிகள் மற்றும் வயர்கள் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காலணியை அணிபவர் நடக்கும்போது அதில் இருந்து ஏற்படும் சக்தி மின்சாரமாக மாற்றப்பட்டு பேட்டரியில் சேமிக்கப்படுகிறது.
இதன்மூலம் கையடக்கத் தொலைபேசிகள், ரேடியோக்கள் மற்றும் ஐ பாட் போன்றவைகளில் சார்ஜ் ஏற்ற முடியும்.
ஐ பேடில் சார்ஜ் ஏற்றும் அளவு பேட்டரியில் மின்சாரம் சேமிக்க 2 1/2 மைல் தூரம் நடக்க வேண்டும். அப்போதுதான் அதற்குரிய மின்சாரம் உற்பத்தியாகும்.

இதை அமெரிக்காவின் பிட்ஸ் பர்க் சந்னேஷி மெல்லன் பல்கலைக்கழக நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர்.




Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல