வியாழன், 4 ஜூலை, 2013

கவிஞர் பா. விஜயின் யாழ்ப்பாண துவேஷம்! ! (வீடியோ,படங்கள் இணைப்பு)

காதலே என்னை காதலி திரைப்படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா கடந்த வாரம் மிக பிரமாண்ட அளவில் சென்னையில் இடம்பெற்றது.

தென்னிந்திய திரையுலக பிரபலங்களின் முகங்களை இங்கு ஒருமுகமாக காண முடிந்தது.

தலைவா, ஜில்லா திரைப்படங்களின் பிரமாண்டங்கள்கூட இவ்விழாவுக்கு வந்து இருந்தனர்.

இத்திரைப்படத்தின் வெற்றிக்கு எல்லோருமே மனதார வாழ்த்தினார்கள்.





திரைப்பட குழுவை ஆசிர்வதித்து பாராட்டினார்கள்.

ஆயினும் இவ்விழாவில் கட்டாயம் பங்கேற்று இருக்க வேண்டிய ஒருவரை காணவே முடியவில்லை.

இவர் வேறு யாரும் அல்லர். பாடலாசிரியர் பா. விஜய்தான். இப்படத்துக்கும் இவர்தான் பாடல் எழுதி இருந்தார்.

விழாவுக்கு மிக கௌரவமான முறையில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தபோதிலும் இவர் வேண்டும் என்றே வராமல் தவிர்த்துக் கொண்டார் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

இத்திரைப்படத்தின் பின்னணியிலும், முன்னணியிலும் யாழ்ப்பாண தமிழர் ஒருவர் இருக்கின்றார் என்கிற காழ்ப்புணர்வு காரணமாகவே பாடலாசிரியர் விஜய் விழாவுக்கு வருகை தர தவறினார் என்று இரகசியமாக திட்டிக் கொண்டனர் விழாவுக்கு வந்திருந்த பிரபலங்கள்.


 
தாய்நாடு
Share |

   
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல