வெள்ளி, 5 ஜூலை, 2013

சிறுமியின் சடலத்தை தோண்டியெடுத்து பாலியல் உறவு: – பாகிஸ்தானில் பகீர்!

‘பெண் என்றால் பேயும் இரங்கும்’ என்பார்கள். பெண்ணுக்கு இரங்காதவர்கள்கூட பெண்ணின் பிரேதத்தைப் பார்த்தால் இரக்கம் கொள்வார்கள். ஆனால்,பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் சடலத்தை தோண்டி எடுத்து, கொடூரமாக பாலியல் உறவு கொண்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து இச்செயலை செய்த மர்ம காமக் கொடூரனை போலீசார் தேடி வருகின்றனர்.

குஜன்வாலா மாவட்டம் கிலா டேடார் சிங் பகுதியைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி ஒருவர், நேற்று முன்தினம் தனது வீட்டில் உள்ள குளியலறையில் குளித்தபோது, மின்சாரம் தாக்கி இறந்தார். இறுதி மரியாதைக்குப் பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.இந்நிலையில், நேற்று காலையில் அந்த மாணவியை புதைத்த இடத்தில் பிரார்த்தனை செய்வதற்காக அவரது உறவினர்கள் கல்லறைத் தோட்டத்திற்கு சென்றனர். அப்போது அங்கு அலங்கோலமாகக் கிடந்த மாணவியின் உடலைப் பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

புதைக்கப்பட்டிருந்த அந்த மாணவியின் சடலத்தை யாரோ மர்ம ஆசாமிகள் தோண்டி எடுத்து உடலுறவு கொண்டது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்களை சமாதானம் செய்தனர். மேலும், குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று உறுதி அளித்தபிறகே அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.தற்போது இந்த சம்பவம் தொடர்பாக கல்லறைத் தோட்டத்தின் வெட்டியானிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்தைரிப்போர்ட்டர்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல