புதன், 14 ஆகஸ்ட், 2013

மார்பகத்தை பெரிதாக்க பிச்சை எடுக்கும் பெண்மணி!

அநேகமாக உலகமெங்கும் அனாதையாக ஒதுக்கப்பட்டவர்கள் அல்லது உடம் குறைபாடு உள்ளவர்கள் தங்களது வயிற்றை நிரப்புவதற்காக பிச்சை எடுப்பார்கள். ஆனால் அமெரிக்காவில் புளோரிடா நகரை சேர்ந்த ஒரு பெண்ணோ தனது மார்பகத்தை பெரிதாக்கும் செயற்கை உறுப்பு சிகிச்சைக்கு நிதி திரட்ட பிச்சை கேட்கிறார். இந்த வித்தியாசமான பெண்ணின் பெயர் கிறிஸ்டினா ஆண்ட்ரூஸ்.

இவர் பென்சாகோலா என்ற இடத்திலுள்ள வீதியில் தனது கோரிக்கை அடங்கிய தட்டிப் பலகையை கையில் ஏந்தியபடி நின்று வழிப்போக்கர்களிடம் பிச்சை கேட்கிறார். அதில், ‘வீடு உண்டு. தேவை பெரிய மார்பகம்’ (நாட் ஹோம்லெஸ், நீடு பூப்ஸ்) என்று மட்டும் எழுதி வைத்திருக்கிறார்.

இவருடைய இந்த விபரீத கோலத்தை பார்த்து பலர் இரக்கப்பட்டு பணத்தை அன்பளிப்பாக வழங்குகிறார்கள். இதுபற்றி கிறிஸ்டினா கூறுகையில், ‘எனக்கு பெரிய மார்பகம் அமைய ஆசைப்படுகிறேன். ஏனென்றால் இப்போது இருப்பது எனக்கு மகிழ்ச்சி தரவில்லை. அதற்காக தெருவுக்கு வந்து நிதி கேட்கிறேன். சிலர் சிரித்து விட்டு கடந்து போகிறார்கள். பலர் அவர்களால் முடிந்த நிதியை அளிக்கிறார்கள். பணத்துக்கு என்ன செய்வது? அதனால் அறிமுகம் இல்லாதவர்கள் என்றாலும் கூட, இவர்களை கவர புன்சிரிப்பை உதிர்க்க வேண்டியிருக்கிறது’ என்று குறிப்பிட்டார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல