திங்கள், 19 ஆகஸ்ட், 2013

சிறுநீரக வியாதிகளின் ஆரம்ப அறிகுறிகள்!

சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மிக எளிது.

நாட்பட்ட சிறுநீரகம் செயலிழப்பு அல்லது கோளாறு என்பது சிறுநீரக மானது உடலின் கழிவு பொருட்களை வெளியேற்றும் தன்மை, அடர் கரைசலான சிறுநீரினை வெளியேற் றும் தன்மை மற்றும் உடலில் உள்ள தனிம ப்பொருட்கள் சிறுநீரில் வெளியேறா மல் தடுத்து பாதுகாக்கும் தன்மை போன்றவற்றை படிப்படி யாக இழந்து, செயல் அற்ற தன்மை அதிகரிப்பதாகும்.



சிறுநீரக பிரச்சனையில் ஆரம்ப நிலையில் ஏற்படும் அறிகுறிகள்

* உடல எடை இழப்பு
* குமட்டல் வாந்தி
* பொதுவான உடல்நலக்குறைவு
* சோர்வு
* தலைவலி
* அடிக்கடி ஏற்படும் விக்கல்
* உடல் முழுக்க ஏற்படும் அரிப்பு (ப்ரூரைட்டிஸ்)
* சிறுநீரகம் பாதிப்பிற்குள்ளாகும் போது ஏற்படும் அறிகுறிகள்
* வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு கூடுவது அல்லது குறைவது
* இரவு நேரத்தில் சிறுநீர் கழிப்பது
* சுலபமாக காயம் ஏற்படுதல் அல்லது இரத்தம் வடிதல்
* வாந்தியில் அல்லது மலத்தில் இரத்தம் காணப்படுதல்
* மந்தமான துங்கிவிழுகிற நிலமை, சுறுசுறுப்பின்மை, குழப்பம், சித்தபிரமை, நினைவற்ற நிலை
* தசை துடிப்பு அல்லது தசை இழுப்பு கைகள் பாதங்கள் மற்றும் பிற பகுதிகளில் உணர்வு திறன் குறைதல் நோயுடன் தொடர்புடைய மற்ற கூடுதல் அறிகுறிகளாவன

* அதிக அளவில் இரவு நேரங்களில் சிறுநீர் கழித்தல்
* அதிக தாகம் ஏற்படுதல்
* தோல் நிறம் வெளிர்ந்து காணப்படுதல்
* நகங்கள் ஒழுங்கின்றி காணப்படுதல்
* சுவாசம் நாற்றம் எடுத்தல்
* உயர் இரத்த அழுத்தம்
* பசியின்மை
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல