திங்கள், 12 ஆகஸ்ட், 2013

சிசு கருப்பையில் இருக்கின்றதா? பலோப்பியன் குழாயில் இருக்கின்றதா? ஸ்கான் அவசியம்!

உங்கள் வயிற்றில் குட்டி சிசு வளர ஆரம்பித்துவிட்டது என்று அறிந்ததும் தங்கள் குழந்தை கருவில் தங்கியுள்ளதா அல்லது /பெலோ ப்பியன் குழாயிலேயே தங்கியிருக்கிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்.

அப்பொழுதுதான் நல்ல ஆரோக் கியமான குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்பது குழந்தை நல மருத்துவர்களின் அறிவுரையாகும்.

ஆரோக்கியமான கர்ப்பம்

விந்தணு உடன் இணைந்த கரு முதலில் ஒரு முழு ‘’கலமாக மட்டுமே இருக்கும். இது நாள்தோறும் வளர்ந்து, இரண்டு இரண்டாக பிரியும் நேரத்தில், /பெலோப்பியன் குழாய் வழியாக அவை மெல்ல மெல்ல கருப்பையை நோக்கி நகரும்.

கடைசியில் கருப்பையில் போய் அமரும்போது கிட்டத்தட்ட நூறு செல்களாக பிரிந் திருக்கும்! இவற்றை தான் ஆரோக் கியமான கர்ப்பம் என்கி றோம்.

/பெலோப்பியன் குழாய் கர்ப்பம்

சில சமயங்களில் கருவானது கருப்பையை நோக்கி நகராமல் /பெலோப்பியன் குழாயிலேயே வளர ஆரம்பிக்கும்.

இதைத் தான் '/பெலோப்பியன் குழாய் கர்ப்பம்' என் கிறார்கள். /பெலோப்பியன் குழாயில் நோய் தொற்று இருந்தால்தான் இப்படி ஆகும். கரு எவ்வாறு நகரும்.

பொதுவாக கரு தானாக நகராது. /பெலோப்பியன் குழாயின் தசைகள் சுருங்கி விரிவதன் மூலம் தான் கருவானது நகர்த்தப்படுகிறது.

நோய் தொற்று காரணமாக சேதமடைந்த /பெலோ ப்பியன் குழாய் என்றால் சுருங்கி விரியாது.

அல்லது /பெலோப்பியன் குழாய் சுருங்கி கருவின் இயக் கத்தை தடுக்கலாம். சில பெண்களுக்கு /பெலோப்பி யன் குழாயின் அமைப்பே வளைந்து நெளிந்து இருக்கும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல